அறம் பொருள் இன்பம் - 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வ.நாகப்பன்

`ஜியோ... ஜியோ…’ என ஒரு வாரம் பாட்டாகப் பாடிக்கொண்டே இருக்கிறாள் ஸ்வாதி. `டேட்டா ரொம்ப சீப் டாட்’ என அவள் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். எங்கே பத்தாவது முறையாக போன் நம்பரை மாற்றிவிடுவாளோ எனத் தோன்றியது மகாதேவனுக்கு.

அடிக்கடி போனை மாற்றுவது மகாதேவனுக்குப் பிடிக்காத ஒன்று. `எதற்கு தேவையில்லாத வெட்டிச் செலவு’ என்பார். பேசுவதற்கும் எஸ்.எம்.எஸ் அனுப்புவதற்கு மட்டும்தான் போன் எனும் எண்ணம் உள்ளவர். அவற்றை ஒரு போன் செய்கிறது எனில், ஏன் அதை அடிக்கடி மாற்ற வேண்டும்?

அதுமட்டுமா? அவள் போனைத் திறந்தால் அதில் முழுக்க ஆப்களாகத்தான் இருக்கும். ஃபேஸ்புக், ட்விட்டர், ஜிமெய்ல் மட்டும் அல்ல... அமேஸான், ஃப்ளிப்கார்ட், மிந்த்ரா, இ-பே என ஷாப்பிங் `ஆப்’கள் வேறு. அடிக்கடி எதையாவது வாங்கிவைக்கப் போகிறாள் என உள்ளூர அவருக்கு யோசனை இருந்தாலும், அதை வெளிப்படையாகக்  கேட்க மாட்டார். அதுக்கும் ஏதாவது சாமர்த்தியமாகப் பதில் வைத்திருப்பாள் ஸ்வாதி. ஆனால், இன்று அவளிடம் கேட்டுவிட வேண்டும்என முடிவெடுத் திருந்தார் மகாதேவன்.
 
“ஸ்வாதி... இங்க வாம்மா” என்றார். அப்பா காரணம் இல்லாமல் கூப்பிட்டாலே, ஏதோ ஒரு விஷயம் இருக்கும் என அவள் மூளைக்குள் ஆன்ட்டனா அப் ஆகிவிடும். ஒரு டிஃபென்சிவ் மோடுக்குப் போய்விடுவாள்.

“சொல்லுங்கப்பா” என்றாள்.

“ஒண்ணும் இல்லம்மா... உன் போன் முழுக்க, `ஆப்’களாக இருக்கே. எல்லாம் நம்மைச் செலவுசெய்யத் தூண்டுவதற்குத் தானே?” என்றார் மகாதேவன்.

ஸ்வாதி பதில் சொல்லத் தொடங்கும் முன்னரே ஷ்யாம் வந்துசேர்ந்தான். தப்பித்தாள் ஸ்வாதி!

``டாட்... நாம எப்படியெல்லாம் செலவு பண்றோம், எந்த மாதிரி பொருட்கள் வாங்குறோம், எவ்வளவு செலவு பண்றோம்கிற மொத்தக் கணக்கையும், ட்ராக் செஞ்சு சொல்றதுக்கு எல்லாம்,  இப்போ `ஆப்’ வந்தாச்சு. அதைப் பத்தி டீடெய்ல்டா சொல்றேன். அதுக்கு முன்னாடி, `சாமர்த்தியமா பணநிர்வாகம் பண்றதுக்கு ஆன்லைன்ல நிறைய வெப்சைட்கள் இருக்கு’னு சொன்னேனே நினைவிருக்கா? பாலிசி பஜார் பத்திக்கூட சொன்னேன்ல. அதேமாதிரி இன்னும் பல பயனுள்ள வெப்சைட்கள் இருக்கு. அதுல முக்கியமான ஒண்ணை மட்டும் இப்ப சொல்றேன்” என்று ஷ்யாம் சொல்ல ஆரம்பிக்க, கேட்கத் தயாரானார் மகாதேவன்.

``வீடு வாங்கலாம்னு இருக்கேன்பா” என்றான் ஷ்யாம்.

`வெப்சைட்கள் பத்தி சொல்லப் போறேன்’னுட்டு சம்பந்தம் இல்லாம வேறு ஏதோ சொல்றானேன்னு யோசித்தார் மகா.

“கவலைப்படாதே ஷ்யாம். இன்னைக்கே நாலைஞ்சு பேங்க் ஏறி-இறங்கி எல்லா விவரங்களையும் கேட்டுவெச்சுடுறேன்” என்றார்.

``அது தேவையில்லப்பா; எல்லா விவரங்களும் இங்கேயே இப்போவே இருக்கு. எந்த பேங்க் அல்லது கம்பெனி குறைந்த வட்டியில் கடன் குடுக்குது’னு தெரியணும்... அவ்வளவுதானே. அதை உட்கார்ந்த இடத்துலேயே தெரிஞ்சுக்கலாம்” என்றான்.

“எல்லாரையும் வீட்டுக்கு வரச் சொல்லியிருக்கியா என்ன?”

``இல்லைப்பா... பாலிசி பஜார் பத்தி முன்னாடி சொன்னேன்ல... நினைவிருக்கா?” என ஷ்யாம் கேட்ட வுடன் எல்லாமும் நினைவுக்கு வந்தது மகாதேவனுக்கு.

“அதுபோலதாம்பா பேங்க் பஜாரும். இது ஒரு வெப்சைட். ஒருவிதத்தில் `அக்ரிகேட்டர்’னு சொல்லலாம்.  ஐம்பதுக்கும் மேற்பட்ட வங்கிகள், மற்றும் வீட்டுக் கடன் கம்பெனிகள் பற்றிய எல்லா விவரங்களும் இங்கே தெரிஞ்சுக்கலாம்.

-நம் வருவாய்க்கு ஏற்ப எவ்வளவு கடன் கிடைக்கும்.

-எத்தனை ஆண்டுகளில் கடனைத் திருப்பிக் கட்டலாம்?

-அதற்கு வட்டி எவ்வளவு?

-இதற்காக வங்கிகள் கேட்கும்  ப்ராசஸிங் கட்டணம் எவ்வளவு?

-எத்தனை நாட்களில் நம் லோன் அப்ரூவல் ஆகும்?

என பல முக்கியத் தகவல்களை வீட்டுல உட்கார்ந்துக்கிட்டே தெரிஞ்சிக்க முடியும்பா” எனத் தொடர்ந்தான்.

“அதுமட்டுமா... ஏற்கெனவே வாங்கியிருக்கிற ஹவுஸிங் லோன் மீது டாப் அப் லோனும் வாங்கலாம். ஒரு பேங்க்ல வாங்கின ஹவுஸிங் லோனை வேறு ஒரு பேங்க்குக்கு பேலன்ஸ் டிரான்ஸ்ஃபரும் செய்யலாம். கடனை முன்கூட்டியே திருப்பிக்கொடுத்து ப்ரீக்ளோஷர் செய்வதற்கு என்ன கட்டணம், ஒரு பகுதியை மட்டும் பார்ட் பேமென்டாகத் திருப்பிக் கட்டினால், அதற்கு ஏதாவது பெனிஃபிட் உண்டா... என பல முக்கியத் தகவல்களைத் தெரிஞ்சுக்க முடியும்” எனச் சொல்லிக் கொண்டிருந்தபோது டோர் பெல் அடித்தது.

இந்த நேரத்தில் பெல் அடித்தது யார் எனப் போய்ப் பார்த்தார் மகா. பீட்சா டெலிவரி பாய்!

ஸ்வாதி ஆர்டர் செய்திருந்த பீட்சா வந்திருந்தது. பீட்சாவை ஆர்டர் செய்துவிட்டு, டெலிவரி நேரம் பார்த்துச் சரியாக மொட்டை மாடிக்குப் போய்விடுவது ஸ்வாதியின் வழக்கம். இருந்தா பைசா கொடுக்கணும்ல... அதெல்லாம் அப்பா இல்லைனா அண்ணா கொடுக்கட்டுமே என்பது அவள் ப்ளான்.

“ஜங்க் ஃபுட் சாப்பிட்டு உடம்பைக் கெடுத்துக்கிறா”னு சொன்னபடி வந்து அமர்ந்தார் மகா.

கேட்டுக்காத மாதிரியே ஷ்யாம் தொடர்ந்தான்.

``பீட்சா டோர் டெலிவரிபோல, வீட்டில் இருந்தபடியே வீட்டுக் கடனையும் வாங்கிக்க வசதி இருக்குப்பா... எவ்வளவு சௌகரியம் பாருங்க.”

``அதுக்கு நாம என்ன செய்யணும்?”

“ரொம்ப சிம்பிள். வருமான வரித் துறை வழங்கும் பான் கார்டு, முகவரிச் சான்று, வருமானச் சான்று, பாஸ்போர்ட் புகைப்படம் இவற்றோடு வங்கிக்கணக்கு விவரங்களை ஆன்லைனிலேயே அப்லோடும் செய்யலாம். எல்லாம் சரியாக இருந்தால்,  `ஈ-அப்ரூவல் கொடுத்துவிடுவார்கள். இப்படி எல்லாவவற்றையும் ஆன்லைனிலேயே செய்துவிடுவதால் அலைச்சலும் மிச்சம்; பெட்ரோலும் மிச்சம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்