திரைத்தொண்டர் - 25

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அமரர் பஞ்சு அருணாசலம், படங்கள் உதவி: ஞானம்

‘உங்க ‘கல்யாணராமன்’ எனக்கு ரொம்பப் பிடிச்ச படம்ண்ணே. அந்த ஐடியாவை வெச்சு நான் ஒரு கதை பண்ணலாம்னு இருக்கேன். பண்ணிக்கலாமாண்ணே?’ என நடிகர், இயக்குநர் ராகவா லாரன்ஸ் வந்து என்னிடம் கேட்டார். ‘தாராளமா பண்ணிக்கப்பா’ என்றேன். மறுநாளும் வந்தார். எனக்கே ஆச்சர்யம், ‘வெச்சுக்கங்கண்ணே’ என ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்தார். ஆனால், நான் அவரிடம் பணம் எதுவும் கேட்கவே இல்லை. `என் எத்தனையோ கதைகளை எடுத்து, மரியாதைக்குக்கூடச் சொல்லாமல் படம் பண்ணுபவர்களுக்கு மத்தியில் இப்படியும் ஒருவரா?!' என்று எனக்கு ஆச்சர்யம்.

‘கல்யாணராமன்’ கதையை மையமாக வைத்து அவர் எடுப்பதாகச் சொன்ன ‘முனி’ மிகப்பெரிய வெற்றி. அடுத்து வந்த ‘காஞ்சனா’வும் வெற்றி. ‘பயந்த சுபாவம் உள்ள ஹீரோ’ என்ற ஒரு விஷயத்தைத் தவிர `கல்யாணராமனு’க்கும் அவரின் படங்களுக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. அந்த ஐடியாவை வைத்து எடுக்கலாம் என நினைத்து டெவலப் பண்ணும்போது, அது வேறு ஒரு கதையாக மாறிப்போயிருக்கிறது. ‘என்னப்பா... என் பட ரைட்ஸை வாங்கிட்டு வேற படங்கள் எடுத்திட்டிருக்க?’ என்றேன். ‘கல்யாணராமன்’ இன்ஸ்பிரேஷனை வெச்சு இன்னும் எத்தனை படங்கள் வேணும்னாலும் எடுக்கலாம்ணே’ என்றார் லாரன்ஸ். சந்தோஷமாக இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்