ஜென் Z - ``பாசத்துக்கு முன்னாடிதான் நான் சாந்தி, பகைக்கு முன்னால நான் விஜயசாந்தி!”

பா.ஜான்ஸன், ஜெ.வி.பிரவீன்குமார், படங்கள்: அருண சுபா

`ஊர் உலகத்துல என்னென்னமோ நடந்திட்டிருக்கு. இந்தச் சம்பவத்தை எல்லாம் இளைஞர்கள் எப்படிப் பார்க்கிறாங்க, என்ன நினைக்கிறாங்க?' எனக் கேட்க நினைத்தோம். ஐந்து பேரை அவர்கள் ஏரியாவிலேயே சந்தித்து, ``என்ன நினைக்கிறீங்க, ஊர்ல இருக்கலாமா... இல்லை துபாய்க்கே போயிரலாமா?'' என சாட்டினோம். வந்த உடனே, ``பாஸ்... இது அந்த விவாத நிகழ்ச்சியா? மைக் கொடுத்து கருத்து சொல்ல சொல்லிட்டு, சொல்லும்போதே `மைக்கை அவர்கிட்ட குடுங்க'னு லந்துக்கொடுப்பாங்களே!'' என சலசலப்புகள். அப்படி எதுவும் இல்லை எனத் தெரிந்ததும்தான் பேசவே தொடங்குகிறார்கள் உஷார் பாய்ஸ் & கேர்ள்ஸ்!

`` `பெண்களை பத்து செகண்டுக்குமேல் பார்த்தாலே ஜெயில்'னு சமீபத்துல...''
- கேள்வியை முடிப்பதற்கு முன்னரே கேர்ள்ஸ் சைடில் இருந்து கோரஸாகக் கொந்தளிப்புகள் கொட்டின.

``அபத்தமான விஷயங்க. பார்க்கிறவன் தப்பா பார்க்கிறானா... சரியா பார்க்கிறானாங்கிறது எல்லாம் நாங்களே முடிவுபண்ணிக்குவோம். எல்லாரும் அப்படிப் பார்க்கிறது இல்லை. அட, எங்களுக்கு இருக்கிற என்டர்டெயின்மென்ட்டே அதுதான். சைட் அடிக்கிற பசங்களையும் அடிச்சு விரட்டிட்டீங்கனா எங்க மஸ்காரா, மசக்களி, மாவுப்பூச்சுக்கு எல்லாம் வேலையே இல்லாம போயிடுமேஜி. அட, அவங்க சொல்றதைப் பாத்தா முக்கால்வாசிப் பேர் உள்ளே போவாங்களே. மொதல்ல ஊருக்குள்ள அவ்வளவு ஜெயில் இருக்குதா பாஸ்? கேட்டுச் சொல்லுங்க'' என்று அதிரடியாக ஆரம்பித்தார் ஷாமிலி. இதைக் கேட்டுக்கொண்டிருக்கும்போதே `நன்றி சொல்ல உனக்கு... வார்த்தை இல்லை எனக்கு...' தேவயானி மோடில் ஆனந்தக்கண்ணீர் சொறிந்து கொண்டிருந்தது பாய்ஸ் குரூப்.

சூப் பாய்ஸ், ஹீரோக்கள் இன்னமும் பன்ச் டயலாக் எல்லாம் பேசுறாங்களே. அதைப் பற்றி...

கீர்த்தி: `காத்துக்கு ஏது வேலி, என்னோட மோதினா நீ காலி'னு சம்பந்தமே இல்லாமல் பேசும்போது கடுப்பாத்தான் இருக்கும். பட் `ஐ  யம் வெயிட்டிங்'னு `துப்பாக்கி' படத்துல விஜய் பேசும்போது செம மாஸா இருந்துச்சுல்ல. அவரோட கேரக்டரைசேஷனை அந்த ஒரு டயலாக்கே சொல்லிடும். அப்படி இருந்தா பன்ச் நல்லது.

ஷாமிலி:
கவிதை பிடிக்கிறவங்களுக்கு, பன்ச்சும் பிடிக்கும். சோ, ஐ லைக் இட்.

அனிருத்: படம்னா என்டர்டெயின்மென்ட்தானே. பன்ச் கேட்டுட்டு, பாப்கார்ன் சாப்பிட்டுட்டு கிளம்ப வேண்டியதுதான். ஹீரோக்களுக்கு பன்ச் ஓ.கே. ஹீரோயின்ஸ்தான் பாவம், பன்ச் டயலாக்கே இருக்காது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்