ஜென் Z - ஆண்ட்ராய்டு நண்பேன்டா!

ஞா.சுதாகர்

பார்வைச் சவால்கொண்டவர்களுக்கு உதவ,  `Bee My Guide' என்ற ஆப் ஒன்றை உருவாக்கியிருக்கிறார் பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் பவன் சிட்டா.

`Dialogue in the Dark' எனும் உணவகம் ஹைதராபாத்தில் பிரபலம். அங்கு போனபோதுதான் பவன் மூளையில் பல்பு ஒளிர்ந்தது. அந்த ஹோட்டலின் ஸ்பெஷல், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் முழு இருளில்தான் உணவு உண்ணத் தருகிறார்கள். காரணம், அங்கு அனைத்து ஊழியர்களும் பார்வைச் சவால்கொண்டவர்கள். நாம் ஐம்புலன்களில் கண்களை மட்டுமே அதிகம் பயன்படுத்துகிறோம். அதற்குப் பதிலாக ஒலி, வாசனை, தொடுதல், சுவை என மற்ற நான்கு உணர்வுகளையும் பயன்படுத்த வேண்டும் என்பதே அந்த ஹோட்டலின் கான்சப்ட். பார்வைச் சவால்கொண்டவர்கள் நம்மைவிட, இந்த உணர்வுகளை அதிகம் பயன்படுத்துகிறார்கள். இங்கு சென்ற பிறகுதான், பார்வைச் சவால்கொண்டவர்களின் பிரச்னை மற்றும் புரிதல் பற்றிய தெளிவு பிறந்து, `Bee My Guide' ஆப் யோசனை பவனுக்குக் கிடைத்துள்ளது.

பார்வைச் சவால்கொண்ட ஒருவர், இந்த ஆப்பை தன் மொபைலில் இன்ஸ்டால் செய்துவிட்டு, அதை கையில் இருக்கும் ஸ்டிக்குடன் இணைத்துவிட்டால் போதும். அவரைச் சுற்றி நடக்கும் விவரங்களை, குரல் வழியாகவே இந்த ஆப் மூலம் தெரிந்துகொள்ள முடியும். நாம் தேடும் பொருட்கள், நம்மைச் சுற்றி இருந்தால் அதன் திசையை நம்மிடம் கூறும். ரூபாய் நோட்டுக்களின் மதிப்பை அறிய, Check My Money என்ற வசதி இதில் உண்டு. கிட்டத்தட்ட ஓர் உதவியாளனைப்போலவே இந்த ஆப் இயங்குகிறது.

``ஏற்கெனவே இருந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தித்தான், இந்த ஆப் வடிவமைத்துள்ளேன். தற்போது இதை ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் ஆப்களில் கொண்டுவர முயற்சிசெய்கிறேன். மொபைல் மற்றும் பார்வைச் சவால்கொண்டவர்களின் கை ஸ்டிக் இரண்டையும் இணைப்பது, எதிரொலிகள் மூலம் தொலைவையும் அறிந்துகொள்ளச் செய்வது போன்ற விஷயங்கள்தான் என் அடுத்த இலக்கு.

விரைவில் இந்த ஆப் ஸ்டோர்களில் கிடைக்கும்’’ என, எதிர்காலத்துக்கும் சேர்த்து, திட்டம் வைத்திருக்கும் பவன்... தற்போது படிப்பது ப்ளஸ் டூ!

வாவ் பவன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்