ஜென் Z - “படம் காட்டுறோம்!”

செ.ஜெ.பச்சமுத்து, படங்கள்: பெ.கெசன்ட்ரா இவாஞ்சலின்

மிழ் வார்த்தைகள், பாரதியின் கவிதைகள், திருக்குறள்... போன்ற தமிழால் நிறைந்திருந்த டி-ஷர்ட்கள் என்பது, இப்போ பழைய ஸ்டைல். மினிமலிசம், மீம்ஸ் என வேற லெவலில் வந்து நிற்கின்றன டி-ஷர்ட்கள்.

ட்ரெண்டிங் திரைப்படங்களை டி-ஷர்ட்டில் இறக்கி, தனி ஷோரூம் நடத்திவருகிறார்கள் `ஃபுல்லி ஃபில்மி’ (Fully filmy). வாழைப்பழக் காமெடி தொடங்கி `பிரேமம்’, `கபாலி’, `சென்னை டே’... எனப் பளபளக்கிறது கலெக்‌ஷன். பீனிக்ஸ் மாலில் சும்மா சுத்துற எல்லோருடைய கவனத்தையும் அழகாக கவர்செய்கிறது ஃபுல்லி ஃபில்மி. உள்ளே சென்று கடையின் கல்லாவில் இருந்த ஆனந்திடம் பேசினேன்...

“எனக்கு, என் ஃப்ரெண்ட்ஸ் ரோனக், கார்த்தி மூணு பேருக்குமே சினிமா ரொம்பப் பிடிக்கும். அது சம்பந்தமான பிசினஸ் பண்ணணும் ஆசை இருந்தது. ஆனால், எப்படிப் பண்ணணும்னு ஐடியா இல்லை. படிச்சுட்டு வேலைக்குப் போயிட்டோம். பிசினஸ் ஆசை மட்டும் அப்படியே இருந்தது. ஒருநாள் ஆன்லைன் ஷாப்பிங் பத்தி ஒரு புரிதல் வந்தது. அப்போதான் ஃபேஸ்புக்ல `மினிமல் கோலிவுட் போஸ்டர்’னு ஒரு பக்கத்தை ஆரம்பித்து தமிழ்ப் படங்களுக்கு மினிமல் போஸ்டர்ஸ் பண்ணினோம். நிறைய ரசிகர்கள் வர ஆரம்பிச்சாங்க. `அதே டிசைனை டி-ஷர்ட்ல போட்டா வாங்குவீங்களா?’னு கேட்டு ஆரம்பிச்சதுதான் புல்லி ஃபில்மி. அந்தச் சமயம்தான், ` `ஓ காதல் கண்மணி’ படத்துக்கு டி-ஷர்ட் பண்ணித் தர முடியுமா?’னு கேட்டாங்க. அப்படி ஆரம்பிச்சதுதான் இந்தப் பயணம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்