ஜென் Z - எப்ப வரும் எப்படி வரும்னு யாருக்கும் தெரியாது?

ச.ஆனந்தப்பிரியா, லோ.சியாம் சுந்தர், படங்கள்: க.மணிவண்ணன்

`காதல்'கிறது ஃபார்வேர்டு மெசேஜ் மாதிரி. யார், யாருக்கு எப்ப அனுப்புவாங்கனு யாருக்குமே தெரியாது. அதுல நீங்க விழுந்துட்டிங்கனா போதும்... `கபாலி’கூட ரிலீஸ் ஆன சின்னப் படம் மாதிரி சிக்கிச் சின்னாப்பின்னம் ஆகிடுவீங்க. வைரமுத்து சொன்ன `காதலில் மொத்தம் ஏழு நிலை’ இருக்கலாம் பாஸ். ஆனா, இந்தக் காதல்ல மொத்தம் ஐந்து ஸ்டெப்தான். அந்த ஐந்தையும் நம்ம பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ் எப்படிப் பண்றாங்கனு பார்ப்போம்.

ரூட் விடு தூது !

பாய்ஸ்: பக்கத்து வீட்டு பரிமளத்துக்கு ரூட் விடுறதுல தொடங்கி ஃபேஸ்புக்ல முகேஷ் அம்பானி பொண்ணுக்கு ரூட் விடுறது வரை காதல் ரூட்ல பசங்கதான் எப்பவுமே ரூட்டுதல. கண்ணால பேசுறது, வாயால கேக்குறது, காதால பார்க்குறதுனு நம்ம பசங்க ரூட் விடுற அழகே தனிதான். ஒரு பொண்ணு திரும்பிப் பாத்துட்டாபோதும் `விட்டுட்டியே லுக்கு... ஆகிட்டேன் டக்கு'னு பொயட் தனுஷ் கணக்கா கவிதையா எழுதி கரெக்ட் பண்ண ட்ரை பண்ணுவாங்க நம்ம பாய்ஸ். அதுக்கும் மடியாத தங்கப் புஷ்பங்களை, ஒத்தரோசாக்களை கரெக்ட் பண்ண, செத்த ராசாக்களா மாறி, அவங்க போற இடத்துக்கு எல்லாம் பின்னாடியே போய் வாட்ச்மேன் வேலைபார்த்து, `நான்தான்டி உன் கூர்க்கா... போடுடி பாஸ் மார்க்கா'னு பாட்டு எல்லாம் பாடி கஷ்டப்படுவானுங்க. சுருக்கமாச் சொல்லணும்னா, 24*7 காசு வாங்காத கூர்க்காவா செயல்பட்டு கரெக்ட் பண்றதுதான் பசங்க ஸ்டைல்.

கேர்ள்ஸ்: `பசங்களுக்கு நாங்களும் சளைச்சவங்க இல்லைடா லகுட பாண்டிகளா’னு பரபரனு வேலைபார்க்கிறவங்கதான் கேர்ள்ஸ். பண்பால அடிக்கிறது பாய்ஸ் பாலிசி... அன்பால அடிச்சு அடிபணியவைக்கிறதுதான் கேர்ள்ஸ் பாலிசி. ‘சாப்பிட்டியா...’ ‘தூங்குனியா?’-னு மெள்ள ஸ்டார்ட் பண்ணி, ‘அதென்ன, என்கிட்டகூட சொல்ல மாட்டியா?’னு கேர்ள் பாய்ச்சுற நங்கூரத்துல நசுங்கி சின்னாப்பின்னமாக ஆரம்பிப்பாங்க பாவப்பட்ட பாய்ஸ். இவ நம்மளை லவ்பண்றாளா... இல்லை நம்ம ஃப்ரெண்டை லவ்பண்றாளானு பாய்ஸுக்குள்ள பல கன்ஃபியூஷன் ஆஃப் த கொலாப்ரேஷன் நடக்கிற வரைக்கும் விட மாட்டாங்க. பார்க்கிற மாதிரியே இருக்கும்... ஆனா, பார்க்க மாட்டாங்க. கேக்கிற மாதிரியே இருக்கும்... ஆனா, கேக்க மாட்டாங்க... லவ்பண்ற மாதிரியே இருக்கும்... ஆனா, லவ்பண்ண மாட்டாங்க. சுருக்கமா சொல்லணும்னா, இருக்கு... ஆனா இல்லைனு பசங்களைச் சுத்தல்லவிடுறதுதான் கேர்ள்ஸ் பவர்!

புரப்போஸிங் டெக்னாலஜி !

பாய்ஸ்: `ஆயக் கலைகள் அறுபத்துநாலுல ஐ லவ் யூ சொல்றதும் ஒரு கலைதான்'னு ஹராப்பா கல்வெட்டுலகூட எழுதியிருக் காங்களாம். புரப்போஸ் பண்றது அந்த அளவுக்கு ஒரு கஷ்டமான விஷயம். நட்டநடு ராத்திரியில மிஷ்கின் பட ஓப்பனிங் சீன் கணக்கா நடுரோட்ல புரப்போஸ் பண்றது, விடாம பெய்யுற மழையில கரன்ட் போய் கடுப்புல இருக்கும்போது வந்து கதறக் கதற புரப்போஸ் பண்றதுனு புதுசு புதுசா ஐடியா பிடிச்சு, காதல் சொல்றதுதான் பசங்க டெக்னிக்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்