ரயில் வாசகன்!

கவிதை: ராஜ் மோகன்

முகத்தில் அறைகிறது குளிர்க்காற்று
ஜன்னல் சிறை மீறி அறையை நிறைக்கிறது
அந்திமஞ்சள் ஒளி
நினைவுகளை அசைபோடச் சொல்கிறது
துரத்திவரும் சிறு தூறலின் வாசனை
திருமண வைபவக் கச்சேரியாகிப்போனது எல்லாம்
குனிந்தும் சாய்ந்தும் படுத்தும்
கைபேசியில் படம் பார்க்கும் மனிதர்களை மட்டுமே
சுமக்கப் பழகிக்கொண்டு
தடதடக்கும் ரயிலுக்கு
முட்டாளாகத் தெரிகிறேன்
புத்தக வாசிப்பும்
வேடிக்கை பார்வையுமாய் வரும்
நான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்