வரைபடக்கலைஞர் வயது 36 - கவிதை

ஜான் சுந்தர், ஓவியம்: செந்தில்

ழக்கமாக எட்டரை மணிக்கு
அலுவலகத்திற்குக் கிளம்பும் வரைபடக்கலைஞர்
அன்றைக்கு ஆறு மணிக்கே புறப்பட்டுவிட்டாராம்
`அவனுக்கு அப்படியென்ன அவதி'
கொதித்துத் தளும்பினார் திண்ணைப் பெரியவர்
`இஞ்சினியர் வந்துருவாரு நேரமா போணும்பானே'
முன்னறையிலிருந்து வீறிடுகிறாள் அம்மா
பொறியாளர் வந்து வாசலில் காத்திருந்தார்
சவரம் செய்துகொண்டார் வரைபடக்கலைஞர்
`காயம் பட்றப்போதுப்பா!'
தகப்பனாரின் வேண்டுதலுக்கு
செவிசாய்த்த சவரக் கடவுள்
குழந்தைக்குச் செய்வதுபோல் கருணை பொங்கச் செய்தார்
சற்றைக்கெல்லாம் பொறியாளர் `போலாம்பா' என்றதும்
காய்ச்சிக்கொண்டிருந்த தப்புக்காரர்
எழுந்து வாசிக்கத் துவங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்