உணவு நல்லது வேண்டும்!

பாசுமி சப்பாத்தி

தேவையானவை: கம்பு, கோதுமை மாவு - தலா 100 கிராம், மஞ்சள் பூசணித் துருவல் - 150 கிராம், வெங்காயம் - 50 கிராம், எண்ணெய் - 50 கிராம், பச்சைமிளகாய் - 2, இஞ்சி - பூண்டு விழுது, கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: வெங்காயத்தை விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் கம்பு, கோதுமை மாவு, துருவிய பூசணி உள்ளிட்டவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலக்கி, கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் சேர்த்து, பிசைய வேண்டும். அரை மணி நேரம் கழித்து சப்பாத்திகளாகத் தேய்த்து தோசைக்கல்லில் போட்டு, இருபுறமும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும். இதற்கு, புதினா சட்னி தொட்டுச் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

பலன்கள்: கம்பு - கோதுமையில் புரதம் நிறைவாக இருப்பதால், தசைகள் உறுதியாகும். பூசணியில் உள்ள நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் செரிமானத்தை மேம்படுத்தும். பூசணியில் உள்ள வைட்டமின் ஏ கண் மற்றும் சருமத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்