இனிதான் திருவிழாவே! | PeriFerry - Chennai-based start-up connects transgenders with inclusive employers - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/07/2017)

இனிதான் திருவிழாவே!

நித்திஷ்

சிலருக்கு அவர்களைக் கண்டாலே பயம், சிலருக்கு அவர்கள் கேலிக்குரிய ‘பொருள்கள்’, வேறு சிலருக்கு அவர்கள் இச்சை தீர்க்கும் இயந்திரங்கள். இப்படித் திருநங்கைகளைப் பற்றிய எதிர்மறை எண்ணங்களே நம் சமூகம் எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. மாற்றுமுயற்சியாக அவர்கள் மேல் பாசிட்டிவ் வெளிச்சம் பாய்ச்சுகிறது ஓர் இளைஞர் குழு. PeriFerry என்ற அந்த அமைப்பின் பிரதான நோக்கமே பிரபல நிறுவனங்களில் திருநங்கைகளுக்குப் போதுமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதுதான். இந்த அமைப்பைத் தொடங்கியவர்களில் ஒருவரான ஸ்டீவ்ஸிடம் பேசினேன்.

``அதென்ன PeriFerry?’’

‘`ஆங்கிலத்துல Pheriphery-னு ஒரு வார்த்தை இருக்கு. அதுக்கு அர்த்தம் ‘விளிம்புநிலை’. சமுதாயத்துல எல்லோரையும் தாண்டி விளிம்புநிலையில இருக்கிறது திருநங்கைகள்தான். அவங்களுக்கான ஓர் அமைப்புக்கு இந்தப் பெயர்தானே சரியா இருக்கும்? போக, ferry-னா இரண்டு கரைகளையும் இணைக்கும் சின்னப் படகுனு அர்த்தம். மூன்றாம் பாலினத்தையும் மற்ற இரண்டு பாலினங்களோடு இணைக்கிற குட்டிப் படகு நாங்கன்னும் வெச்சுக்கலாம்.’’

நீங்க எப்படி பீல் பண்றீங்க