TOLET - “சென்னையில் வாழ்றதே சாதனைதான்!”

பா.ஜான்ஸன்

“முதல்நாள் ஷூட்டிங். `எல்லாம் தயாரா இருக்கு.  ஏன் லேட்டு’ன்னு இணை இயக்குநரிடம் கேட்குறேன். `சார் நீங்கதான் ஸ்டார்ட்... கேமரா சொல்லணும்’னு அவர் சிரிக்க, நானும் சிரிச்சுக்கிட்டே ஸ்டார்ட்...  கேமரா, ஆக்‌ஷன் சொன்னேன். பத்துவருஷம் ஒளிப்பதிவாளரா இருந்த பழக்கம், நான் இயக்குநர்ங்கறதயே மறந்துட்டேன்” என்று சிரிக்கிறார் செழியன். இயக்கிய முதல் படத்திற்கே கொல்கத்தா சர்வதேசத் திரைப்பட விழாவில் 2017-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த படம் என்கிற தங்கப் புலி விருதை வென்ற மகிழ்ச்சியோடு இருந்தவரிடம் பேசினேன்.

“விருதுச் செய்தி வந்த பிறகுதான் நீங்க படம் எடுத்த தகவலே தெரியுது. ஏன் இதைப் பற்றிச் சொல்லவே இல்லை?”

“இது கொரில்லா முறையில் எடுக்கப்பட்ட  இண்டிபெண்டன்ட் சினிமா. மறைந்திருந்து இயங்குவதுதானே கொரில்லா முறை. இலக்கை அடைந்த பிறகு செஞ்சது நான்தான்னு பொறுப்பு எடுத்துக்கலாம். ஒரு விஷயத்தை சீரியஸா செய்யணும்னு நினைக்கும் போது எல்லோருக்கும் தெரியப்படுத்தி, அந்த விளம்பரமே நம்ம கவனத்தைச் சிதறடிக்கும் இல்லையா? என் நெருங்கின நண்பர்களுக்குக்கூட நான் படம் எடுக்கிறது தெரியாது. நம்ம வேலையை எளிமையா  செஞ்சிட்டே இருக்க வேண்டியதுதான்.  ஒழுங்கா செஞ்சா எல்லோருக்கும் தெரியப்போகுது... நாங்க சென்னையில் ஒரு வீட்ல பத்து நாளுக்குமேல  ஷூட் பண்ணோம். பக்கத்து வீட்டுல இருக்கிறவங்களுக்குக்கூட  ஷூட்டிங் நடக்குதுன்னு முதல் ஒரு வாரத்துக்குத் தெரியாதுனா பாத்துக்கங்க.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்