அண்ணாதுரை - சினிமா விமர்சனம்

ன்னால் பாதிக்கப்பட்ட தன் தம்பியின் வாழ்க்கையை மீட்கத் தன்னையே பலிகொடுக்கும் பாசக்கார, நேசக்கார அண்ணன்தான் இந்த `அண்ணாதுரை.’

கதை..? இறந்துபோன காதலியின் நினைவாக, வாழ்வே மாயம் என `குடி’மகனாகத் திரிகிறார் அண்ணாதுரை. தன் குடிப்பழக்கத்தாலேயே ஒரு கொலைப்பழியில் சிக்கி ஜெயிலுக்குச் செல்கிறார். அதனால்  ஒட்டுமொத்தக் குடும்பமுமே இடிவிழுந்த மரமாகக் கருகிவிடுகிறது. ஜெயிலிலிருந்து ரிலீஸ் ஆகும் அண்ணாதுரைக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருக்கிறது. ஸ்கூல் பி.டி வாத்தியாரான தம்பி, தம்பிதுரை பெரிய ரௌடியாக மாறி நிற்கிறார். அண்ணாதுரை குடிப்பழக்கத்திலிருந்து மீண்டாரா, தன் தம்பியை நல்வழிப்படுத்தினாரா, அண்ணாதுரை, தம்பிதுரையின் குடும்பம் என்ன ஆனது, நாம் படம் பார்த்து முடிப்பதற்குள் மொத்தம் எத்தனை கொட்டாவிகள் விட்டோம் என்று ஏகப்பட்ட கேள்விகள்.

அண்ணன் பெயர் அண்ணாதுரை. தம்பி பெயர் தம்பிதுரை என உலகின் மிக எளிமையான அண்ணன் - தம்பி கதையை எடுத்துக்கொண்டு ஆள்மாறாட்டக் கதை சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர்
ஜி.சீனிவாசன். படத்தின் முதல் காட்சியிலிருந்து கடைசிக்காட்சி வரை, ‘நாம் பண்டரிபாய், பாகவதர் காலத்தில் இருக்கிறோமா’ என்ற பிரமையை ஏற்படுத்துகிறது படம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்