“இனி அனிமேஷன் படங்கள்தான்!”

ப.சூரியராஜ்

காக்கி உடையில் கார்த்தியின் மிடுக்கையும், கதை சொல்லலில் வினோத்தின் டீடெய்ல்ஸையும் தாண்டி இன்னுமொரு படி `தீரனை’ ரசிக்கவைத்தது, படத்திலுள்ள இரண்டு அனிமேஷன் அத்தியாயங்கள். இரண்டில் ஒன்றை படு ஸ்டைலிஷாகவும், மற்றொன்றை செம க்ளாஸாகவும் தந்து ரசிகர்களை அட போட வைத்திருக்கிறார்கள் `ஹைப்ரீட் ஸ்டுடியோஸ்’ குழுவினர். குழுவில் ஒருவரான ஓவியர் செந்திலிடம் பேசினேன்.

``யார் ப்ரோ நீங்கெல்லாம்?’’

“ ஜெயச்சந்திரன், பாலச்சந்தர், நான்னு மூணு பேரும் சென்னை கவின் கலைக் கல்லூரில க்ளாஸ்மேட்ஸ். மூணு பேரும் படிப்பை முடிச்சுட்டு வெவ்வேறு இடங்கள்ல வேலை பார்த்துட்டிருந்தோம். அனிமேஷன் துறையில் சாதிக்கணும்ங்கிற ஆர்வம் மட்டும் எங்களை ஆட்டிப்படைச்சுட்டிருந்தது. கிட்டத்தட்ட ஏழு வருசம் கழிச்சு, மூணு பேரும் சேர்ந்து ஸ்டுடியோ தொடங்கி, அனிமேஷன் வேலைகள் பண்ணிட்டிருந்தோம். அப்போதான் `மூடர் கூடம்’ நவீன் வந்தார். அந்தப் படத்தில் குபேரன் முன்கதையை அனிமேஷனாகப் பண்ணோம். அது பரவலாகக் கவனிக்கப்பட்டுச்சு. அடுத்ததாக ஹெச்.வினோத்தின் `சதுரங்க வேட்டை’யில் சில காட்சிகள் பண்ணோம். வினோத்துடனான முதல் சந்திப்பே ரொம்ப சுவாரஸ்யமானது. நான் விகடனுக்காக நிறைய ஓவியங்கள் வரைஞ்சிருக்கேன். அப்படி நான் வரைஞ்சிருந்த ஒரு ஓவியத்தைச் சொல்லி `விகடன்ல செந்தில்னு ஒருத்தர் வரையுறார். அந்த ஸ்டைலிலேயே பண்ணிக் கொடுங்க’னு வினோத் கேட்க, `அந்தச் செந்திலே நான்தான்’னு சொல்ல, மனிதர் ஷாக் ஆகிட்டார்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்