டக்வொர்த் லூயிஸ்

ரெமோ கார்த்திக், ஓவியம்: கார்த்திகேயன் மேடி

லூயிஸ்: ``இப்பல்லாம் எலெக்‌ஷன்ல அரசியல்வாதிங்களவிட நடிகர்களே ஆர்வமா இருக்காங்களே, இது சரியா ப்ரோ?’’

டக்வொர்த்: ``இதுல என்ன ப்ரோ தப்பு? அரசியல் வேற, நடிப்பு வேற இல்லயே...’’

லூயிஸ்: ``புரியலயே?!’’

டக்வொர்த்: ``இப்ப... நம்ம நடிகர்கள்  விளம்பரத்துக்காக  அரசியல் பண்றது, அரசியல்வாதிங்க மக்கள் முன்னாடி நடிக்குறது...?’’

லூயிஸ்: ``அதெல்லாம் ஓகே ப்ரோ... சினிமால பண்ற ஹீரோயிசத்தை தொகுதிலயும் காட்ட முடியும்னு மக்கள் நம்புவாங்களா?”

டக்வொர்த்: ``நம்ப வெக்கணும் ப்ரோ. அதானே ஒரு ஹீரோவோட வேலை!’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!