என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் -10 - “என் தமிழுக்குத் தாளம்தான் இலக்கணம்!”

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
கமல்ஹாசன்

ஆர்.சி.சக்தி, என் கையில் பேனாவைக் கொடுத்து, ‘நீ எழுத்தாளன்’ என்று என்னை நம்ப வைக்க, நானும் நம்பி ஆரம்பித்துவிட்டேன். கிராமத்திலிருந்து வரும் பணக்காரரை சினிமா எடுக்கவைத்து இழுத்துவிடுவார்களே, அப்படி நானும் ‘எழுத்தாளன்’ என்று நம்பி கலர்கலராக பேனா வாங்கியதுதான் மிச்சம். அப்படி எழுதுவதற்காக மட்டுமே நான் படிக்க ஆரம்பித்தேன். நமக்குள் தோன்றும் எண்ணங்கள் நன்றாகவே உள்ளன. ஆனால், அவை ஓரிடத்தில் தேங்கி நிற்கும் குளமாக இருக்கிறதே, ஓடவேண்டாமா? ஓடவேண்டும் என்றால் இன்னோர் ஆற்றுடன் கலந்தால்தான் முடியும். ஓடையாக ஓரிடத்தில் நின்றால் யாராவது கழுவிவிட்டுச் சென்றுவிடுவார்கள். நதியோடு கலந்தால்தான் நமக்குப் பெருமை என்பது போகப்போகப் புரிந்தது. ஆனால், சீக்கிரமே புரிந்துவிட்டது என்பதுதான் பெரிய நன்மை. அதைப் புரியவைக்க மிகப்பெரிய ஊக்கியாக இருந்த எழுத்தாளர்கள் சிலரைப் பற்றி சொல்கிறேன்.

ட்சி, இலக்கு, எண்கள்... இவை முழுவதும் ஆர்.சி.சக்தி மூலமாக எனக்குக் கிடைத்தவை. ‘அவை மாத்திரம் போதாது’ என்று சொல்லி, தமிழிலேயே வந்த சில முக்கியமான புத்தகங்களைக் கொடுத்தது சில நண்பர்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் எனக்கு அறிமுகமானவர் சுஜாதா. எனக்கு முன்பே எங்கள் வீட்டில் அவருக்கு நண்பர்கள் இருந்தார்கள். என் அண்ணன்மார்களைப் போல் வீட்டுக்குத் தெரியாமல் சிகரெட் பிடிக்கும் பிராமணப் பிள்ளைகளில் அவரும் ஒருவர். எல்டாம்ஸ் சாலையில் அவர்களுக்கு இருந்த ஒரே புகைப்போக்கி, எங்கள் வீட்டின்  மொட்டைமாடி. அப்போது அடிக்கடி வீட்டுக்கு வருவார். ஆனால், இவர்தான் சுஜாதா என்றெல்லாம் எனக்கு அப்போது தெரியாது. ஆனாலும், அவரைச் சின்ன வயதில் இருந்தே தொடர்ந்து படிப்பேன். ஏனெனில் எங்கள் அக்கா, சுஜாதாவின் ரசிகை. அந்த வயதில் தி.ஜானகிராமன் ரொம்பவே ஹெவி. அதனால் சுஜாதாவை எனக்குப் பிடிக்கும்.

சுஜாதா அப்போது தினமணிக் கதிரில் ‘சொர்க்கத் தீவு’ என்றொரு கதை எழுதிக்கொண்டு இருந்தார். அதன் மூலக்கதையைக் கண்டுபிடித்துவிட்ட மகிழ்ச்சியில், ‘இதுதான் அந்தக்கதை’ என்று சொல்லிப் பரபரப்பை ஏற்படுத்திவிட்டோம். உடனே அவர் கோபித்துக்கொண்டு அந்தத் தொடரையே நிறுத்திவிட்டார். ஆனால், எங்களுக்கு அதை நிறுத்திய சந்தோஷம் கொஞ்சநாள்களே இருந்தன. பிறகு ‘எங்கோ ஒரு சாயல் இருந்ததற்காக நல்லா எழுதிட்டு இருந்த மனிதரை நிறுத்தவைத்து விட்டோமே’ என்று வருந்தினேன். பிற்பாடு அதை அவரிடம் சொன்னபோது,  ‘`அடப்போடா பித்துக்குளி... உனக்கு பயந்து நிறுத்திய நான் பெரிய பித்துக்குளி’’ என்று சிரித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்