நான் அகதி! - 10 - ரத்தமும் அவமானமும்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மருதன்

யிர்கொல்லும் கண்ணீர்ப் புகைக்குண்டு, ஆபத்தற்ற கண்ணீர்ப் புகைக்குண்டு என்று இரண்டாக வகைப்படுத்தி அழைத்தாலும் இவற்றுக்கிடையில் எந்தப் பெரிய வேறுபாடும் இருப்பதுபோல் தெரியவில்லை. இரண்டுமே ஒன்றுபோல் பாய்கின்றன, ஒன்றுபோல் உயிர்களைக் கொல்கின்றன. ஜவஹெர் அபு ரஹ்மா என்னும் 35 வயது பாலஸ்தீனப் பெண்மீது இஸ்ரேல் வீசியது எந்த வகைப் புகைக்குண்டு என்று தெரியவில்லை. அப்படியே சுருண்டு கீழே விழுந்துவிட்டார். போராட்டத்தை நிறுத்திவிட்டு, சிலர் அவரை அள்ளியெடுத்துக்கொண்டு ஓடியிருக்கிறார்கள். ஓடிக்கொண்டிருக்கும்போதே அடுத்தடுத்து குண்டுகள் புகை கக்கியபடி பெயர்ந்துவந்து அவர்கள் காலடியில் விழுந்து கொண்டிருந்தன. மயங்கியவர்களைப் போலவே ஓடியவர்களுக்கும் சம அளவில் மூச்சுத் திணறல் இருந்திருக்கவேண்டும். அவற்றையெல்லாம் மீறித்தான் மருத்துவமனைக்குள் கொண்டு சென்றிருக்கிறார்கள்.

இது நடந்தது ஜனவரி 2011-ல். மேற்குக் கரையின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பிலின் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அபு ரஹ்மா. `நான், என் வீடு, என் மதம், என் குடும்பம்’ என்று வெளியுலகம் உட்புகாதவாறு கதவுகளை இறுக்கப் பூட்டிக்கொண்டு தன்னுடைய பிரத்தியேக உலகில் வாழ்ந்துவந்தவர்தான் அவர். ஆனால், அவர் வசித்த அதே கூரையின்கீழ் வளர்ந்த அவரின் சகோதரர் பசீம் அபு ரஹ்மா வீட்டைப் பற்றிச் சிந்தித்ததே கிடையாது. மாபெரும் அரசியல் கனவொன்றில்தான் அவர் எந்நேரமும் திளைத்துக்கொண்டிருந்தார். இஸ்ரேலின் பிடியிலிருந்து பாலஸ்தீனம் விடுவிக்கப்படவேண்டும் என்பதுதான் அந்தக் கனவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்