அடல்ட்ஸ் ஒன்லி - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜெயராணி, படங்கள்: மதன்சுந்தர்

``ஆரோக்கியம் இல்லாமல் வாழ்க்கை என்பது வாழ்க்கையல்ல. வெறும் பலவீனமும் துயரமுமே. அது மரணத்தின் பிம்பம்!’’ - புத்தர். 

குழந்தைகளின் உரிமைகள் மற்றும் சுதந்திரம் குறித்த விழிப்பு உணர்வு பெற்ற முற்போக்கான பெற்றோர்கூட குழந்தையின் ஆரோக்கியத்தில் பலவிதமான அறியாமைகளைக் கொண்டுள்ளனர்.

உங்களுக்கு ஒரு நூறு பேரைத் தெரியும் என வைத்துக்கொள்வோம். அவர்களிடம் உங்களுக்கு உடலில் ஏதாவது பிரச்னை இருக்கிறதா என்று கேட்டுப் பாருங்கள். சர்க்கரை, ரத்தக் கொதிப்பு, தலைவலி, சுவாசக் கோளாறு, தைராய்டு, மாதவிலக்குப் பிரச்னை, கருத்தரிக்காமை, குடல் வால், இதய நோய், மூட்டுவலி, புற்றுநோய், மனச் சோர்வு என அடுக்கிக் கொண்டே போவார்கள். ``அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை’’ எனச் சொல்லக் கூடிய ஒரே ஒருவர் இருப்பாரெனில், அவர்தான் இந்தத் தலைமுறையின் அதிசய மனிதர். 

உடல் உறுப்புகள் 18 வயது வரை வேகமாக வளர்ச்சியடைகின்றன. இந்தக் காலத்தில் கண்ட ரசாயன மருந்துகளையும் பயன்படுத்துவதால் உறுப்புகளின் வளர்ச்சியும் ஆரோக்கியமும் கடுமையாக பாதிக்கப்படுகின்றன. மருந்துக் கழிவுகள் சேர்ந்து பலவீனமடைந்த செல்களுக்கு நோயை எதிர்க்கும் சக்தி இருப்பதில்லை. இதனால் பல தீவிரமான நோய்த் தாக்குதலுக்குக் குழந்தைகள் ஆட்படுகின்றன. தன் குழந்தை ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்பது தான் எல்லாப் பெற்றோரின் விருப்பமும். ஆனால், அதற்கான வழிகள் எதுவும் நமக்குத் தெரியாது அல்லது தப்பு தப்பாக நிறைய தெரிந்து வைத்திருக்கிறோம். மருந்துகள் இல்லாமல் நம்மால் வாழவே முடியாதா, என்ன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!