நான்காம் தோட்டா - சிறுகதை

சிறுகதை: சி.சரவணகார்த்திகேயன், ஓவியங்கள்: ஹாசிப்கான்

“பாதுகாப்புடன் வாழ விரும்புபவர்கள், உயிர்வாழவே உரிமையற்றவர்கள்.”

பொக்கை வாய் அவிழ்த்துப் புன்னகை உதிர்த்தார் காந்தி. எதிராளியை வாதிட முடியாமற்செய்யும் புன்னகை; துப்பாக்கியுடன் வரும் ஒருவனை, தயங்கச்செய்யும் புன்னகை.

டெல்லி டி.ஐ.ஜி-யும், காந்தியின் உதவியாளர் கல்யாணமும் பதிலற்று நின்றிருந்தார்கள்.

நேற்று போலீஸ் சூப்பரின்டெண்டென்ட், காந்திக்குப் பாதுகாப்பு வழங்குவதைப் பற்றிப் பேசிச் சென்றிருந்தார். காந்திக்கு அதில் விருப்பமில்லை. இது இரண்டாவது முயற்சி.

ஏற்கெனவே அல்புகர்க் சாலையில் அமைந்துள்ள‌ அந்த‌ பிர்லா இல்லத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள‌து. போலீஸ்காரர்கள் சீருடையின்றி ஆங்காங்கே திரிகிறார்கள் என்பதை காந்தி கவனித்தே இருந்தார். சந்தேகத்துக்கு இடம்கொடுக்கும் நபர்களை நிறுத்தி விசாரிக்கிறார்கள். எல்லாம் உள்துறை அமைச்சர் சர்தார் படேலின் ஏற்பாடு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்