“அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ!” | Ajith will be an International hero hereafter - Says Siruthai Siva - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (29/06/2017)

“அஜித் இனி இன்டர்நேஷனல் ஹீரோ!”

ம.கா.செந்தில்குமார்

“இது, இந்தியன் எமோஷன்ல ஒரு இன்டர்நேஷனல் படம். இதுல அஜித் சார் ஒரு இன்டர்நேஷனல் ஏஜென்ட். நாம சின்ன வயசுல நிறைய ஏஜென்ட் படங்களைப் பார்த்திருப்போம். அதில் த்ரில்லிங்கான நிறைய விஷயங்கள் இருக்கும். அப்படி இதிலும் உலகம் பூரா சுத்துற டிராவல், மைனஸ் டிகிரி பனிமலைக் காட்சிகள், பயங்கரமான பைக் சேஸிங், ஹெலிகாப்டர் துரத்தல்கள்னு நிறைய த்ரில் இருக்கும். ஃபிசிக்கலா ஃபிட்டா இருந்தா மட்டும்தான் இப்படி ஒரு படம் பண்ண முடியும். ஆனா, இந்தக் கதையை நான் அஜித் சார்கிட்ட சொன்னப்ப, அவர் முழங்கால்ல ரெண்டு ஆபரேஷன் செஞ்சிட்டு ஓய்வில் இருந்தார். கதை கேட்டுட்டு ‘நான் பண்றேன் சிவா’னு சொன்னார். ‘சார்...’னு நான் இழுத்தேன். ‘நான் நிச்சயம் பண்றேன் சிவா’ன்னார். அந்த ஆபரேஷன்களைக் கடந்துவந்து தன் உடம்பை ஃபிட்டாக்கி இன்னிக்கு இப்படி ஒரு படம் பண்ணியிருக்கார். அவரின் இந்தத் தன்னம்பிக்கைதான் ‘விவேக’த்துக்கான ஆக்ஸிஜன்’’ - ‘வீரம்’, ‘வேதாளம்’ தொடர்ந்து  ‘விவேக’த்தில் ஹாட்ரிக் அடிக்க உழைத்துக்கொண்டிருக்கிறார் இயக்குநர் சிவா. எடிட்டிங் இடைவெளியில் சிவாவிடம் பேசினேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க