ஜூலி டீச்சரும் சரவணன் சாரும் | City school gets commerce stream back for disabled girl - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/06/2017)

ஜூலி டீச்சரும் சரவணன் சாரும்

எம்.புண்ணியமூர்த்தி, படங்கள்: தி.விஜய்

``ஹேய்,  ஓடு... ஓடு...  `விகடன்லேருந்து வந்திருக்காங்க’ன்னு சொல்லி ப்ரீத்தியோட அம்மாவைக் கூட்டிகிட்டு வா...’’ - தலைமை ஆசிரியர் உத்தரவு பிறப்பிக்க, மாணவர்கள் உற்சாகமாக ஓடுகிறார்கள். ``சத்துணவுக் கூடத்துல ஏதாவது வேலை பார்த்துட்டிருப்பாங்க. இப்ப  வந்துருவாங்க’’ என்கிறார் தலைமையாசிரியர்  சரவணன்.

ப்ரீத்தி என்ற ஒரே ஒரு மாணவிக்காக பதினொன்றாம் வகுப்பில்,  பிசினஸ் மேத்ஸ் பிரிவைத் துவக்கி தமிழகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது கோயம்புத்தூர், சீரநாயக்கன் பாளையத்தில் உள்ள சா.பூல்சந்த்-வீர்சந்த் அரசு மேல்நிலைப்பள்ளி. ப்ரீத்தி... எலும்பு வளர்ச்சி பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிப் பெண். பதினாறு வயதானாலும் உடலளவில்  ப்ரீத்தி இன்னும் குழந்தைதான். அவரால் எழுந்து நிற்க முடியாது. தவழ்ந்த நிலையிலேயேதான் இருக்கிறார்.  பெருத்த தலை, சின்னஞ்சிறிய கை, கால்கள்... ப்ரீத்தியின் ஒவ்வொரு நொடியும் நம்பிக்கையால் சுழல்பவை. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 468 மதிப்பெண்கள் எடுத்து அசத்தியிருக்கிறார் ப்ரீத்தி.

டெஸ்க்கில் தலையைத் தூக்கியபடி  ப்ரீத்தி படுத்திருக்க, அவர் ஓர் ஆளுக்காக, ‘பிசினஸ் மேத்ஸ்’ வகுப்பெடுத்துக்கொண்டிருந்தார் ஓர் ஆசிரியர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க