தல 25

ம.கா.செந்தில்குமார்

ஜித்துக்கு இது வெள்ளி விழா ஆண்டு. அஜித்தின் முதல் படமான ‘அமராவதி’ படப்பிடிப்பு தொடங்கியது 1992 ஆகஸ்ட் 3. 2017 ஆகஸ்ட் 3-ம் தேதியோடு 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் அஜித். `விவேகம்' படம் ஆகஸ்ட் 10 திரைக்கு வருகிறது. இதனால், இரண்டையும் சேர்த்து பெரும் கொண்டாட்டமாக மாற்றத் திட்டம். ஆகஸ்ட் மாதம், `அஜித் மாத'மாக இருக்கும்.

* விவேகம் படத்தின் படப்பிடிப்பு மே 10-ம் தேதியோடு முடிவடைகிறது. 147 நாள்கள் நடந்த படப்பிடிப்பில் 70 சதவிகிதப் படப்பிடிப்பு ஐரோப்பாவின் செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷியா ஆகிய நான்கு நாடுகளில் நடந்துள்ளன.

இன்டர்போல் அதிகாரியான அஜித் ஒரு குற்றச் சம்பவத்தை விசாரிக்கத் தொடங்க, அந்தக் குற்றத்துக்கான ஊற்றுக்கண் ஐரோப்பாவின் வெவ்வேறு நாடுகளில் கிளைபரப்பி உள்ளது தெரியவருகிறது. படிப்படியாக ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு வில்லனை எதிர்கொண்டு முறியடிக்கிற பரபரப்பான ஆக்‌ஷன்தான் விவேகம் படத்தின் கதை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்