வீட்டில் இருந்தே நடிப்புதான்!

பா.ஜான்சன்

 “பச்சையப்பன் கல்லூரியில் பி.காம் முடிச்சுட்டு, என்ன பண்றதுன்னு யோசிச்சேன். சினிமா ஆர்வம் அதிகம் என்பதால் நடிக்கலாம்னு முடிவு பண்ணேன். நடிக்கிறதுக்காக நிறைய முயற்சிகள் செஞ்சும், பெரிய வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால், டூத்பேஸ்ட் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். ஆனாலும், கலை ஆர்வம் கொஞ்சமும் குறையலை. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆனேன். அதே சமயத்தில் நிறைய சீரியல்களிலும் நடிச்சுட்டிருந்தேன். ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’வில் நான்கு வாரங்கள் மட்டுமே வரக்கூடிய கேரக்டர் `பட்டாபி’. அது நல்லாயிருக்கவே, சீரியல் முழுக்க வந்தது; பெரிய ரீச்சும் ஆச்சு. ஒருவேளை `வாய்ப்பு கிடைக்கலை’னு டூத்பேஸ்ட் கம்பெனியிலேயே இருந்திருந்தா, என்ன ஆகியிருக்கும்? ‘மொழி’, ‘பயணம்’, ‘தர்மதுரை’, ‘8 தோட்டாக்கள்’ மாதிரியான படங்களில் நடிக்க முடிஞ்சிருக்காதுல்ல?” என, தன் திரைப் பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.  இவரின் அக்கா ஹேமமாலினியும் பிரபல டப்பிங் ஆர்ட்டிஸ்ட் தான்! சின்னத்திரை நடிகர், டப்பிங் ஆர்ட்டிஸ்ட், குணச்சித்திர நடிகர்... என, தனக்குள் பல பரிமாணங்களைக் கொண்ட எம்.எஸ்.பாஸ்கரின் வீடு முழுக்க சினிமாவால் நிறைந்திருக்கிறது. ஆம்... மகள் ஐஸ்வர்யா, டப்பிங் கலைஞர். மகன் ஆதித்யா, நடிகராகத் தயாராகிக் கொண்டிருக்கிறார். இந்தக் கலகல கலைக் குடும்பத்தைச் சந்தித்ததில் இருந்து...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்