நட்சத்திரா சொன்னா நம்புங்கள் மக்களே!

ஆர்.வைதேகி, படங்கள்: அ.சரண் குமார்

``என் பர்த் சர்ட்டிஃபிகேட்டை போஸ்டர் அடிச்சு ஒட்டினாதான் எல்லாரும் நம்புவாங்க போல... என்னோட  நிஜப் பேரே நட்சத்திராதாங்க.. நம்புங்கப்பா...” அலறாத குறையாக பெயருக்கான ஃப்ளாஷ்பேக் சொல்கிறார் நட்சத்திரா. சன் மியூசிக்கின் முக்கிய முகம். நிகழ்ச்சித் தொகுப்பாளினி என்பது மட்டும் நட்சத்திராவின் அடையாளம் அல்ல. செம பிஸியாக குறும்படங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

``நட்சத்திராவின் பயோடேட்டாவில் வேற என்னவெல்லாம் இருக்கு?''

``முதல்ல நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர். ஸ்கூல்ல எல்லா புரொகிராம்லயும் முதல் ஆளா நிற்பேன். அப்புறம் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சேன். எனக்கு செஃப் ஆகணும்ங்கிறதுதான் கனவா இருந்தது. காலேஜ் படிச்சிட்டிருந்தபோது என் ஃப்ரெண்ட் ஒரு நியூஸ் சேனலுக்கு ஆடிஷனுக்குப் போகணும். ஆனா, கடைசி நிமிஷத்துல அவங்களால போக முடியலை. `நீதான் டான்ஸராச்சே... உனக்கு எக்ஸ்பிரஷன்ஸ் சூப்பரா வருது... நீ ட்ரை பண்ணேன்'னு சொன்னாங்க.  போனேன்.  ஆடிஷன் முடிஞ்சுது. எதிர்பாராத விதமா அது வொர்க்அவுட் ஆகிடுச்சு. அதுவரைக்கும் கேமரா முன்னாடி பேசின அனுபவமே கிடையாது. டக்குனு ஒரு ஷோ பண்ணச் சொன்னாங்க. பண்ணேன். `புதுமுகம் மாதிரியே தெரியலை... நல்லா பண்றீங்க'னு நிறைய பேர் பாராட்டினாங்க. ஹாபியா ஆரம்பிச்சதை முழுநேர வேலையா பண்ணலாம்ங்கிற நம்பிக்கையும், தைரியமும் வந்துடுச்சு. அந்த தைரியம்தான் சன் டி.வி-க்குள் கொண்டு போய்விட்டது. சன் சிங்கர் ஷோ பண்ண ஆரம்பிச்சேன்.  இப்ப மூணாவது சீஸன் வரைக்கும் வந்தாச்சு...''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick