ஆதார் ஏன் அவசியமாகிறது?

ஆர்.விஜயசங்கர்

ன்றைய தேதியில் நீங்கள் இந்தியாவில் வாழ எது அவசியமோ இல்லையோ ஆதார் அவசியம். ரேஷனில் அரிசி வாங்குவது முதல் வருமான வரி கட்டுவது வரை, பள்ளி அட்மிஷன் முதல் மருத்துவமனை அட்மிஷன் வரை, ரயில் டிக்கெட்டிலிருந்து விமான டிக்கெட் வரை… ஆதார் அவசியமாக்கப்படுகிறது.

 ``ஆதார் இல்லாத மனிதன் அரைமனிதன்'' என்று எதிர்காலத்தில் பள்ளிகளில் பாடமெல்லாம் நடத்துகிற வாய்ப்பு இருக்கிறது. அந்த அளவுக்கு இந்த 12 இலக்க ஒற்றை அடையாள எண், இந்தியர்களின் வாழ்வில் அனைத்து அம்சங்களிலும் ஊடுருவி நிற்கிறது.


தனிமனிதனின் கனவு!

இந்தியா குறித்த கனவு நம் எல்லோருக்குமே இருக்கிறது. சிலர் அதை நூலாகவும் எழுதியிருக்கிறார்கள்.  ஆனால், எல்லோருக்கும் தாங்கள் காணும் கனவை செயல்படுத்திப் பார்க்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. நந்தன் நிலக்கனிக்கு அது கிடைத்ததால் உருவானதுதான் இந்த `ஆதார்'. 

இந்தியாவின் மிக வெற்றிகரமான ஐ.டி நிறுவனம், இன்ஃபோசிஸ். இதன் இணை நிறுவனர்,  நந்தன் நிலக்கனி. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்; மும்பை ஐ.ஐ.டி-யில் எலெக்ட்ரிகல் என்ஜினீயரிங் படித்தவர். 2008-ம் ஆண்டில் இவர் எழுதிய நூல், ‘Imagining India: The Idea of a Renewed Nation’. இதில் அவர், ‘விசேஷ அடையாளம்’ என்ற கருத்தாக்கத்தை முன்வைத்திருந்தார்.

‘ஒவ்வொருவருக்கும் ஒரு எண் கொடுத்து, அந்த எண்ணை அடையாளமாக வைத்து லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வங்கிக் கணக்குகளைத் துவக்கலாம். இதன்மூலம் அரசின் சேவைகளைச் செழுமையாக்கி,
ஊழலைக் குறைத்து இந்தியப் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லலாம்’ என்பது அவரது சிம்பிள் ஐடியா.

2009-ம் ஆண்டு இந்த நூல் வெளியான சில வாரங்களில் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இருந்து நிலக்கனிக்கு அழைப்பு வந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்