பறக்கலாம்... ரசிக்கலாம்... ஜாலியா! | Ideas for Tourist - Ananda Vikatan | ஆனந்த விகடன்

பறக்கலாம்... ரசிக்கலாம்... ஜாலியா!

அராத்து

`டூரிஸ்ட்' என்று ஆங்கிலத்தில் போர்டு போட்டுக்கொண்டு பேருந்துகள் அடிக்கடி கடப்பதை முன்பெல்லாம் பார்த்திருப்போம். நடுத்தர மக்கள், ஏழை மக்கள் எனப் பொருளாதாரப் பாகுபாடு இல்லாமல் கூடி, குடும்பத்துடன் சென்றதுதான் இந்த டூரிஸ்ட் பஸ்கள். அப்போதெல்லாம் குறைந்த விலையில் பேருந்துப் பயணம், பேருந்தை ஓரங்கட்டி சமையல், ஆற்றிலோ வாய்க்காலிலோ குளியல், ரொம்ப முடியவில்லை என்றால் கல்யாண மண்டபத்தில் தூக்கம்... என டூரிஸம் தமிழகத்தில் செழிப்பாக  இயங்கிக்கொண்டிருந்தது. அதனால், நமக்கு டிராவலோ டூரோ புதிது கிடையாது.

ஆனால் இப்போது, டிராவல் விதிகள் மாறிவிட்டன. திட்டமிடுதலிலிருந்து வாகனம், தங்கும் இடம், சுற்றிப் பார்த்தல்... என அனைத்திலும் மாற்றங்கள் வந்துவிட்டன. ஏராளமான இணையதளங்கள், ஆண்ட்ராய்டு ஆப்கள், ஃபோரம்கள் என, தகவல்கள் கொள்ளைக்கொள்ளையாகச் சிதறிக் கிடக்கின்றன.

திட்டமிடுதலில் ஏற்படும் சிறிய கோளாறு அல்லது சொகுசுக் குறைவைக்கூட நம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. `ஸ்ட்ரெஸ், டென்ஷனைக் குறைக்க டிராவல் செல்வோம்' என்று போய், அதிலேயே ஒரு குறைபாடு வந்தால் டென்ஷன் ஏறிவிடும்.

இன்றைய தேதியில், டென்ஷனே இல்லாமல் நிம்மதியாக ஒரு ஜாலிப் பயணத்தைத் திட்டமிடுவது எப்படி?

டூர் போவதில் இரண்டு வகை உண்டு.  ஒன்று, திட்டமிட்டப் பயணம். இன்னொன்று, திட்டமிடாதப் பயணம்.

திட்டமிடாதப் பயணம்தான் சாகசங்கள் மற்றும் சுவாரஸ்யங்கள் நிறைந்தது. ஆனால், இது எல்லோருக்கும் சரிப்படாது. தனிநபருக்கோ அல்லது இரண்டு நபர்களுக்கோ ஏற்றது; அசௌகர்யங்களை எல்லாம் அனுபவங்களாக ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், கொண்டாட்டமான மனநிலையும் உள்ளவர்களுக்கு ஏற்றது. இன்பச் சுற்றுலாதான் உங்கள் நோக்கம் என்றால், இன்ச் பை இன்ச்சாக உங்கள் பயணத்தை ஸ்கெட்ச் போட்டுத் திட்டமிட வேண்டும்.

எப்படி?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick