கவலை வேண்டாம்... நீட்டா ஜெயிக்கலாம்...

வெ.நீலகண்டன், ஞா. சக்திவேல்முருகன்

``தற்போதைய சூழலில் நீட் தேர்வுக்கு  விலக்கு அளிக்க முடியாது’’ என்று வெளிப்படையாகவே அறிவித்துவிட்டார் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா. இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில்
சேர விரும்பும் தமிழக மாணவர்கள் கட்டாயம் `நீட்’ தேர்வை எழுதியாக வேண்டும்.

மே 7-ம் தேதி, நீட் தேர்வு நடக்கவிருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த 88 ஆயிரம் மாணவர்கள் இந்தத்  தேர்வை  எழுத  விண்ணப்பித்திருக்கிறார்கள். சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உள்பட இந்தியா முழுவதும் 104 நகரங்களில் 2,200 மையங்களில் `நீட்’ தேர்வு நடைபெற உள்ளது. தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி உள்ளிட்ட 10 மொழிகளில் தேர்வு எழுதலாம். தேர்வு முடிவுகள், ஜூன் 8-ம் தேதி வெளியிடப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick