ஆண்பால் பெண்பால் அன்பால் - 33

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
#MakeNewBondsகவிஞர் நரன், படங்கள்: அருண் டைட்டன்

`மகளை மகன்போல் வளர்க்கத் துணியும் நாம்,
மகனை மகள்போல் வளர்க்கத் துணிவதில்லை!'

- Gloria Steinem

ன்னுடைய ஆறாவது வயதில், என் தந்தை காலமாகிவிட்டார். அவரின் முகம், இப்போதுகூட புகைமூட்டமாகத்தான் ஞாபகமிருக்கிறது. பால்யத்திலிருந்து இளமைக்காலம் வரை, என் வீட்டுக்குள் மூன்று பெண்களுக்கு மத்தியில்தான் நான் வளர்ந்தேன். ஒருவர், தனது இருபத்துச் சொச்சம் வயதில் கணவனை இழந்த என் அம்மா. இன்னொருவர், என்னிலும் மூன்று வயது மூத்த அக்கா. மற்றொருவர், என்னைவிட இரண்டு வயது குறைவான, மூளை வளர்ச்சியற்ற என் தங்கை. அதனாலேயே ஒரு பெண்ணின் அத்தனை உடல் மற்றும் மன உபாதைகளையும் என் கண்முன்னே நேரடியாகப் பார்த்திருக்கிறேன்.

என் அம்மா, சிறிய ஹோட்டல் ஒன்றை நடத்தினார். நானும் என் அக்காவும் பள்ளிக்குச் செல்லும் நேரம் போக மற்ற நேரங்களில் அங்குதான் வேலைசெய்வோம். எங்கள் இருவரின் பால்யங்களும் கண் முன்னே அங்கே சிதைந்துகொண்டிருந்தன. அதிகாலை 5 மணியிலிருந்து இரவு 11 மணி வரை கடுமையான உழைப்பு. இளம் வயதிலேயே கணவனை இழந்த ஒற்றை மனுஷியான என் அம்மாதான், தனியே நின்று சமூகத்துடன் போராடி மூவரையும் வளர்த்தார். அவருக்கு எங்களைத் தவிர்த்து வேறு நினைவுகளே இல்லை என நினைக்கிறேன். அந்தச் சிறுவயதில் பல நேரங்களில் இப்படி யோசித்திருக்கிறேன், `அம்மா ஏன் வேறொரு திருமணம் செய்துகொள்ளவில்லை? அதைப் பற்றி ஏன் ஒருவரும் அவரிடம் பேச முன்வரவில்லை? இதே ஓர் ஆண் தன் இளம் வயதில் ஏதோ ஒருவகையில் மனைவியை இழந்திருந்தால் அல்லது பிரிந்திருந்தால், இந்தச் சமூகம் அவரிடம் மறுமணத்தைப் பற்றி எப்படியெல்லாம் வலியுறுத்தியிருக்கும்!'

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்