ஏவல் - சிறுகதை | Nanjil Nadan short story - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/04/2017)

ஏவல் - சிறுகதை

நாஞ்சில் நாடன், ஓவியங்கள்: ஸ்யாம்

‘எட்டு, பத்து மாசமாச்சு... இப்படி ஓட்டம் தொடங்கி. சின்னப்பாடா? வில்லுக்கீறி எங்கே கெடக்கு, வீரகேரளமங்கலம் எங்கே கெடக்கு?’

சலிப்பாய்ச் சலித்தபடி இலுப்பாற்றுப் பாலத்தின் கீழே, பாறைமேல் சலசலத்தோடும் வெள்ளத்தின் ஓசையும், தலைக்கு மேல் நித்திலம் பூத்த கருங்கோட்டுப் புன்னை கவித்திருந்த மையிருட்டுமாகக் கால் நீட்டிப் படுத்தது ஏவல். நேரம் நள்ளிரவும் மறிந்து கீச்சான்களின் சில்லொலி. தூரத்தில் ஆழ்ந்த மோனத்தில் திளைத்திருந்தது தாடகை மலை. பாலத்தின் கீழே, கல்லுக்கட்டுச் சுவரோரம், சின்ன முக்கோணக் கல்லில், மஞ்சளை அப்பிய பீடத்தில் குடியிருந்த பாலத்தடி மாடன் எழுந்து, ஏவல் பக்கத்தில் குத்துக்காலிட்டு அமர்ந்தார். அவருக்கும் அல்லும் பகலும் அறுபது நாழியலும், ஆண்டுக்குப் பதின்மூன்று அமாவாசை பௌர்ணமிகளுமாக எப்படித்தான் சாகுமோ காலம்? காற்றாட உட்கார்ந்து கதைக்கலாம் என்பதே அவரது உத்தேசம்.

“என்ன மக்கா... பனங்கருக்கா? ரொம்ப நேரமாட்டுப் படுத்துக்கெடக்க? திரேகத்திலே வாட்டமா? இல்லே மனசிலேதான் சீணமா?” என்றார் பாலத்தடி மாடன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க