“நான் நன்றி மறக்கமாட்டேன்!” | Actor Kalaiyarasan interview - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (18/05/2017)

“நான் நன்றி மறக்கமாட்டேன்!”

பா.ஜான்ஸன், படம்: சொ.பாலசுப்பிரமணியன்

``அப்போ எல்லாம் ஷூட்டிங்கை வேடிக்கை பார்க்கப் போவேன். படத்தின் அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் கூப்பிட்டு கும்பலோட சேர்ந்து நடங்கனு சொல்வாங்க, நடப்பேன். என் ஆரம்ப நாள்கள் இப்படித்தான்.  கொஞ்சம் பெரிய ரோல்ல நடிச்சதில்  ‘அர்ஜுனன் காதலி’தான் என் முதல் படம். ஜெய் நண்பனா நடிச்சிருப்பேன். அது இன்னும் ரிலீஸ் ஆகலை. ஆனா, இப்போ நானா, நீயானு போட்டி போட்டுகிட்டு அடுத்தடுத்து வரிசையா படங்கள் ரிலீஸுக்குக் காத்திருக்கு. இருந்தாலும், எதுவுமே இல்லாம துவங்கின ஆரம்ப நாள்கள் இருக்குல்ல... அப்போ சந்திச்ச நபர்கள், நடந்த விஷயங்கள் எதையும், எப்பவும் மறக்கவே மாட்டேன். அதுதான் நிரந்தரமும்கூட.” நெகிழ்வுடன் பேசத்துவங்குகிறார் கலையரசன். ‘எய்தவன்’ ரிலீஸைத் தொடர்ந்து ‘காலக்கூத்து’, ‘சைனா’, ‘பட்டினப்பாக்கம்’ என அடுத்தடுத்து படங்கள் நடித்து முடித்து, ரிலீஸுக்குக் காத்திருக்கிறார் கலை.