“அடுத்தவங்க வாழ்க்கை ஈஸினு நினைக்காதீங்க!”

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்ஸன்

“ ‘பவர்ல இருக்கிறவன் உயிருக்குத் தர்ற மரியாதையை... பப்ளிக் உயிருக்கு ஏன் சார் தர மாட்டேங்றீங்க?’ இந்த டயலாக்கைத் தமிழில் ரொம்ப ஈஸியா பேசிட்டேன். தெலுங்குல பேசுறதுக்குத்தான் நாக்குத் தள்ளிருச்சு. ஆனா, கஷ்டப்பட்டால்தான் பிரதர் வெற்றி கிடைக்கும்!” தத்துவத்தோடு தொடங்குகிறார் கார்த்தி. ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தின் தெலுங்கு டப்பிங்கில் இருந்தவரைச் சந்தித்தேன்.

“ மறுபடியும் ஒரு போலீஸ் படம்?”

“ ‘சிறுத்தை’ படம் பண்ணும்போது நிறைய காவல்துறை அதிகாரிகளைச் சந்திச்சுப் பேசினேன். அப்ப ஒரு அதிகாரி என்கிட்ட ஒரு பழைய வழக்கைப் பற்றிப் பேசிட்டிருந்தார். அந்த வழக்கு ரொம்ப சுவாரஸ்யமா இருந்துச்சு. அதையே ஒரு படமா பண்ணினா நல்லா இருக்கும்ணு தோணுச்சு. அப்புறம் அஞ்சாறு வருஷத்துக்கு அப்புறமா ‘சதுரங்க வேட்டை’ வினோத்கிட்ட போலீஸ் கதை ஒண்ணு இருக்குனு தெரிய வந்தது. அவர் கதையைச் சொல்ல ஆரம்பிச்சப்போ ஆச்சர்யமா இருந்துச்சு. அது `சிறுத்தை’ சமயத்தில் நான் கேட்ட அதே கதை! வாழ்க்கையோட மேஜிக் இதுதான். அதே கதைல டைரக்டர் வினோத் நிறைய டீடெய்லிங் பண்ணி வெச்சிருந்தார். தொடங்கிட்டோம்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!