நான் அகதி! - 6 - வேட்டையாடு விளையாடு

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மருதன்

‘ஒரு மனிதன் கையில் துப்பாக்கியுடன் நின்றுகொண்டிருக்கிறான்.  அருகில் ஒரு சிறுமி. கீழே தரையில் ஒரு சிங்கம் செத்து விழுந்து கிடக்கிறது. வீரனே, நீ ஒரு குழந்தையைக் காப்பாற்றிவிட்டாய் என்று எல்லோரும் அவனைப் பாராட்டுகிறார்கள். அப்போதுதான் அந்த மனிதன் ஒரு முஸ்லிம் என்பது தெரியவருகிறது. உடனே எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள். ஓர் அப்பாவி சிங்கத்தை இந்தப் பயங்கரவாதி அநியாயமாகக் கொன்றுவிட்டான்!’ நேற்று எனக்கு வந்த வாட்ஸ் அப் இது என்று சொல்லி, தன் அருகிலிருந்தவரிடம் காண்பித்தார் காலித். அந்த அறையில் சிரிப்பொலி பரவுகிறது.

சிரியாவிலுள்ள ஹோம்ஸ் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் காலித். தற்சமயம் அவர் அமர்ந்திருப்பது ஜோர்டானில் உள்ள கிழக்கு அம்மான் பகுதியில் அமைந்திருந்த ஒரு சமுதாயக் கூடத்தில். மொத்தம் பதினொரு பேர் அங்கே திரண்டிருந்தனர். அவர்கள் வெவ்வேறு பின்னணியைச் சேர்ந்தவர்கள். சிலர் இராக்கிலிருந்தும் சிலர் சிரியாவிலிருந்தும் இன்னும் சிலர் வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்தனர். அனைவரும் இஸ்லாமியர்கள்.

அடர்த்தியான மீசையைக் கொண்டிருக்கும் அகமதுவின் வயது 54. தன்னைச் சுற்றி எழுந்த சிரிப்பலைகளை அவர் பொருட்படுத்தவில்லை. அவர் கையில் ஒரு பை. கத்தை கத்தையாகக் காகிதங்கள் அதிலிருந்து பிதுங்கிக் கொண்டிருந்தன.  வீட்டை விட்டு வெளியில் எங்கே போனாலும் அவற்றை அவர் அள்ளியெடுத்துக்கொண்டு சென்றாகவேண்டும். இராக்கிலுள்ள ஃபலூஜா என்னும் இடத்தைச் சேர்ந்தவன் என்பதற்கான ஆதாரங்களை அவர் வைத்திருந்தார். தான் இராக்கிலிருந்து வெளியேறிவிட்டவன் என்பதற்கான அத்தாட்சி அவரிடம் இருக்கிறது. தனக்கு எந்த நாடும் இல்லை, தான் ஓர் அகதி என்பதற்கான அதிகாரபூர்வமான சான்றுகளையும் அவர் வைத்திருந்தார். இந்த மூன்றையும் தேவைக்கேற்ப அவர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். யார் எப்போது எதைக் கேட்பார்கள் என்று சொல்லமுடியாது என்பதால், ஒரு தேநீர் குடிக்கப் போகவேண்டுமென்றாலும் பையோடுதான் அவர் சென்றாக வேண்டும். அந்தப் பையைத் தொலைப்பது எதிர்காலத்தையும் கடந்தகாலத்தையும் ஒருசேரத் தொலைக்கும் செயல் என்பதால் ஒரு கையில் பிடித்துக்கொண்டேதான் இன்னொரு கையால் அவர் தேநீரையும் அருந்தியாக வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்