வளர்மதிகள் வந்துகொண்டே இருப்பார்கள்!

தமிழ்ப்பிரபா - படங்கள்: க.தனசேகர்

2014-ம் ஆண்டு... சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையே கடுமையான போராட்டம். மாணவர்களை அடித்து விரட்ட போலீஸைக் கல்லூரிக்குள் இறக்குகிறது நிர்வாகம். தடியடி நடத்துவதற்குக் கையிலிருந்த பிரம்பை இறுக்கிப் பிடித்தபடி, மாணவர்களை நோக்கி ஆயிரம் பூட்ஸ் கால்கள் நடந்துவர அவர்களுக்கு எதிரே நின்று ஒரே ஒரு மாணவி உரத்த குரலில் பேசுகிறார்.

 “காவலர்களே, தடியடி நடத்துனா பயந்து ஓடிடுவோம்னு நினைக்காதீங்க. திரும்பி அடிக்க நாங்க பத்தாயிரம் பேர் இருக்கோம். எங்க உரிமைக்காக அமைதி வழியில் போராட்டம் பண்ணிட்டு இருக்கிற எங்களைச் சீண்டாதீங்க. வந்த வழியே திரும்பிப் போயிடுங்க” என அந்தப் பெண் பேசி முடித்ததும் “வெளியேறு வெளியேறு காவல்துறையே வெளியேறு” எனப் பத்தாயிரம் மாணவர்களும் ஒருசேர முழக்கமிடுகிறார்கள். மைதானம் அதிர்கிறது. காவல்துறையினர் பின்வாங்கிக் கல்லூரியைவிட்டு வெளியேறுகிறார்கள். அன்று ஓங்கி ஒலித்த, போலீஸைப் பின்வாங்க வைத்த, கல்லூரி நிர்வாகத்தின் எதேச்சதிகாரத்தை அடக்கிய குரல் வளர்மதியின் குரல்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்