எல்லைகள் கடந்து இதயங்களால் இணைந்தோம்!

சக்தி தமிழ்ச்செல்வன், படம்: ஜெ.வேங்கடராஜ்

ந்த சிங்கிள் பெட்ரூம் பிளாட்டில் கொஞ்சம் புத்தகங்கள், பிரித்து வீசப்பட்ட கிஃப்ட் கவர்கள், புதிதாக வாங்கிய பாத்திரங்கள் இவற்றுடன் தளும்பத் தளும்ப அன்பும் நிறைந்திருந்தது. ஹாலில் போட்டிருந்த சிறிய சோபாவில் அமர்ந்து முகம் மலரப் பேசத் தொடங்கினர் திருநங்கை பிரீத்திஷா - திருநம்பி ப்ரேம்குமரன் இணையர். சில வாரங்களுக்கு முன்பு பெரியார் திடலில் சாதி, இன, பால் பேதங்களைக் கடந்து திருமணம் செய்துள்ளனர். சட்டப்படி பதிவுத் திருமணம் செய்துள்ள முதல் திருநங்கை - திருநம்பி ஜோடி.

 திருநெல்வேலியைச் சேர்ந்த பிரீத்திஷா ஆரம்பத்தில் டெல்லியில் நாடகங்களில் நடித்துள்ளார். அதன்பிறகு சென்னையிலுள்ள ஜெயராவ் மாஸ்டரிடம் முறையாக நடிப்புப் பயிற்சி பெற்றுள்ளார். குறும்படங்கள், மேடை நாடகங்கள் என நடித்துவந்தவர் ‘பாம்புச்சட்டை’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தனியார் தொலைக்காட்சியொன்றின் குழந்தைகள் நிகழ்ச்சிக்கு நடிப்புப் பயிற்சி கொடுத்துவருகிறார். ஈரோட்டைச் சேர்ந்த ப்ரேம்குமரன் நாட்டு மாட்டுப் பண்ணைகள் அமைப்பது குறித்த பயிற்சிகள் பெற்றுள்ளார். தற்போது பண்ணை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!