விகடன் பிரஸ்மீட்: “தனுஷுடன் சேர்ந்து நடிக்கத் தயார்!” - சிவகார்த்திகேயன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
#VikatanPressMeetவிகடன் டீம், படம்: கே.ராஜசேகரன்

விகடன் நிருபர்களுக்கு மட்டுமேயான பிரத்யேக பிரஸ்மீட் இது.

 “ஹியூமர் சென்ஸ் ஒரு வரம்னு சொல்வாங்க. அதனால உங்களுக்குக் கிடைச்ச ப்ளஸ், மைனஸ் என்னென்ன?”

- ப.சூரியராஜ்

“மைனஸ்னு எனக்கு எதுவும் இருந்ததில்ல. எனக்குக் கிடைச்ச ப்ளஸ் எல்லாத்துக்குமே ஹியூமர் சென்ஸ்தான் காரணம். எந்த ஷோவுக்கு வந்தாலும் நான் பெர்ஃபார்ம் பண்ணும்போது எல்லாருக்கும் பிடிக்கிற மாதிரி  இருக்கணும்கிறதிலேயும் யாரையும் ரொம்பக் கிண்டல் பண்ணக்கூடாதுங்கிறதுலயும் தெளிவா இருப்பேன். அதனால பிரச்னைகள்னு பெருசா வந்ததில்ல. ஹியூமர்தான் என் இமேஜ். அதை உடைச்சுப் பண்றதுதான் எனக்குப் பெரிய சேலஞ்சிங்கா இருக்கும். சில ரசிகர்களுக்கு மட்டும் நாம பண்ற மிமிக்ரி பிடிக்காமப் போயிரும். அதனால சில திட்டுகளையும் வாங்கியிருக்கேன். மிமிக்ரி பண்றவங்க எல்லாருமே அதைக் கடந்துதானே வரணும்!”

“வில்லேஜ் ரோல்னா சூரி, சிட்டி ரோல்னா சதீஷ்னு உங்க படங்கள்ல இவங்க அடிக்கடி வர்றாங்கன்னு விமர்சனம் இருக்கே?”

- ப.சூரியராஜ்

“மொக்கையா பண்ணா ஏன்டா மொக்கையா பண்றீங்கனு கேட்கலாம். ஆடியன்ஸ் அதை என்ஜாய் பண்ணும்போது அது எங்களுக்கும் ப்ளஸ்ஸாதான் இருக்கு. ஒருவேளை ஆடியன்ஸுக்குப் பிடிக்கலைனாதான் எங்களுக்குப் பிரச்னை. ஹியூமர்ங்கிறதுல ரெண்டு பேரும் டைமிங்கைப் புரிஞ்சிகிட்டாதான் செட் ஆகும். சதீஷ், சூரி அண்ணா ரெண்டு பேர்கிட்டேயும் எனக்கு காமெடி வொர்க் அவுட் ஆகுதுன்னா அதுக்குக் காரணம், ஆஃப் ஸ்க்ரீன்ல எங்களுக்குள்ள இருக்கிற ரிலேஷன்ஷிப்தான். எனக்கு எல்லோர்கூடவும் வேலை பார்க்கணும்னு ஆசை இருக்கு. ‘இன்று நேற்று நாளை’ இயக்குநர் ரவிக்குமார் என்னை வெச்சு டைரக்ட் பண்ணும் படத்துக்காகக் கதை சொல்லும்போதே, ‘கருணாகரன்தான் காமெடியன்’னு சொன்னார். நானும் ஜாலியா அவரோட நடிக்கப்போறேன்”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்