“மணிரத்னம் கலாய்ச்சார்!” | Interview with Director R.Kannan - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/04/2018)

“மணிரத்னம் கலாய்ச்சார்!”

உ.சுதர்சன் காந்தி

“ஒரு இயக்குநரா ‘இவன் தந்திரன்’ எனக்கு வெற்றிப்படம். ஆனா, தயாரிப்பாளரா மிகப்பெரிய நஷ்டம். அதுல இருந்து மீண்டு வரவே சிரமப்பட்டேன். ஆனாலும் இப்ப இயக்கும் ‘பூமராங்’ படத்தையும் நானே தயாரிக்கிறேன். ‘நாம் செய்யும் நல்லது கெட்டது, ஏதோ ஒரு வழியில நமக்கே வந்து சேரும்’ என்கிற கர்மா கான்செப்டை வெச்சு இந்த ஸ்க்ரிப்டை எழுதியிருக்கேன். இன்றைய விவசாயம்தான் கதைக்களம். ஒரு ஷெட்யூல் படப்பிடிப்பு முடிஞ்சிருக்கு. ஸ்ட்ரைக் முடிஞ்சிட்டா படமும் வேகமா முடிஞ்சுடும்.” - இயக்குநர் ஆர்.கண்ணனின் வார்த்தைகளில் நம்பிக்கை... நம்பிக்கை.

“நல்ல உடல்திறனோட, சாஃப்ட்வேர் லுக்ல உள்ள இளைஞன்தான் என் நாயகன். இந்த கேரக்டருக்கு அதர்வாவைத் தவிர வேறு யாரையும் யோசிக்க முடியலை. ஒரிஜினல் மாதிரியே தெரியும் ப்ராஸ்தெடிக் மேக்கப்ல அதர்வா வரும் காட்சிகள் இருக்கு. ஆனா என்னவா வருவார் என்பது சஸ்பென்ஸ். , ‘பத்மாவதி’, ‘102 நாட் அவுட்’ மாதிரியான படங்களில் வேலைசெய்த ப்ரீத்தி, மார்க்னு இரண்டு மேக்அப் ஸ்பெஷலிஸ்ட்டுகள் ஒர்க் பண்றாங்க.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க