இதான் சினிமா... இதான் வாழ்க்கை! | Interview with National award winner Chezhiyan, director of To Let - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/04/2018)

இதான் சினிமா... இதான் வாழ்க்கை!

சனா, படங்கள்: பா.காளிமுத்து

“ ‘ஏதாவது லாக் ஆகிடுச்சோ’னு சந்தேகப்படுற அளவுக்குப் போன வாரம் முழுக்க ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ் தவிர வேற யாரிடம் இருந்தும் எனக்கு எந்த போனும் வரவே இல்லை. ஆனா இப்ப, தேசிய விருது அறிவிப்பு வந்தபிறகு அவ்வளவு அழைப்புகள். மிஸ்டு கால் மட்டுமே நூறுக்கும் மேல இருக்கும். யாரையும் விட்டுடக்கூடாதேனு ஒவ்வொருத்தரையா திரும்ப அழைத்து நன்றி சொல்லிட்டிருக்கேன். இதான் சினிமா; இதான் வாழ்க்கை” - இயல்பாகப் பேசுகிறார் ஒளிப்பதிவாளர் செழியன். இவர் இயக்கிய ‘டூ லெட்’  திரைப்படம் ‘சிறந்த தமிழ்ப் படமாக தேசிய திரைப்பட விருதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்தப் படம் இன்னும் திரையரங்கில் வெளியாகவில்லை. வாழ்த்துகள், பூச்செண்டு களுக்கு மத்தியில் செழியனை அவரின் வீட்டில் சந்தித்தேன்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க