“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல!” | Struggles are not new to me - Says Tamil poet Vairamuthu | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/04/2018)

“போராட்டங்கள் எனக்குப் புதிது அல்ல!”

ரீ.சிவக்குமார், எம்.குணா, படம்: கே.ஜெரோம்

நியூட்ரினோ எதிர்ப்புப் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரிய போராட்டம் எனத் தொடர்ச்சியாக, சூடான களங்களில் கவிஞர் வைரமுத்துவைப் பார்க்க முடிகிறது. களத்துக்கு வந்தவரின் கருத்து குறித்து அறிய நடந்த உரையாடல் இது...

‘காற்று வெளியிடை’ படத்தில் உங்கள் பாடல் வரிகளுக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான், ‘வான் வருவான்’ பாடலைப் பாடிய சாஷா திருப்பதி ஆகியோருக்குத் தேசிய விருது கிடைத்திருப்பது குறித்த உங்கள் மனப் பதிவு..?

“புயலுக்கும் குயிலுக்கும் வாழ்த்துகள்!”

நியூட்ரினோ எதிர்ப்பு, காவிரிப் பிரச்சினை ஆகியவற்றுக்கான போராட்டக் களத்தில் உங்கள் அனுபவங்கள்..?

“நியூட்ரினோ ஆய்வகம் என்ற விஞ்ஞானக் களத்துக்கு நாங்கள் விரோதிகள் அல்லர். அந்த ஆய்வுக் களத்தின் மீதிருக்கும் சர்வதேச ஆதிக்கம் எங்கு போய் முடியுமோ என்ற அச்ச உணர்வே எங்களை வாட்டுகிறது. நியூட்ரினோ தனித் துகளாகத் தீங்கற்றது; கற்றைப் படுத்தப்பட்டால் கொடியது. அணு ஆயுதங்களை அழிக்கும் ஆற்றல்கொண்டது. அதுதான் அச்சம் தருகிறது. ரசாயன ஆயுத ஆய்வகத்தின் மீது நேற்று சிரியாவின் டமாஸ்கஸ் தாக்கப்பட்டது மாதிரி நாளை ஒரு வான்வழித் தாக்குதல் நடந்தால் அது நிச்சயமாக நியூட்ரினோவைக் குறிவைக்கும். அது மேற்குத்தொடர்ச்சி மலையைத் துண்டாடிவிடும். மேற்குத் தொடர்ச்சி மலை மிகப் பழைமையானது. 15 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் மடகாஸ்கர் வரைக்கும் நீண்டிருந்த நிலப்பரப்பு பிய்த்தெறியப்பட்டது. பிறகு 8 கோடி ஆண்டுகளுக்கு முன்பு  புவியியல் கலகங்களால் நேர்ந்த எரிமலை வெடிப்பில் மேற்குத் தொடர்ச்சி மலை உண்டானது. இவ்வளவு பழைமையான மலைக்கு - எங்கள் நீராதாரங்களின் அன்னைக்கு எதிர்காலத்தில் பேராபத்து நேர்ந்துவிடுமோ என்று மண்ணின் மைந்தனாகக் கவலைப்படுவது தவறா? வைகோ மீது எனக்கு மதிப்பு உண்டு. அவர்  தன் குழுவோடு ஒற்றை மனிதனாக நடந்து செல்லும்போது இரக்கமே மேலிடுகிறது. அவருக்குத் தோழமையோடு தோள் கொடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் உரிமைத் தண்ணீருக்கு நீண்டகாலமாக இழைக்கப்படும் அநீதி  எங்களைக் களத்தில் இறக்கிற்று. உடல் நலக்குறைவைத் தாண்டி பாரதிராஜா களத்துக்கு வந்தது பாராட்டுக்குரியது. ஆனால், அங்கு நிகழ்த்தப்பட்ட அல்லது நிகழ்ந்ததாகச் சொல்லப்பட்ட வன்முறையை நாங்கள் வரவேற்கவில்லை.”

நீங்க எப்படி பீல் பண்றீங்க