போராட்ட அருவி | Jyoti Dhawale on being HIV victim and fighting society - Ananda Vikatan | ஆனந்த விகடன்

போராட்ட அருவி

ஆர்.வைதேகி

ஜோதி தாவ்லேயை நிஜ ‘அருவி’ என்றே சொல்லலாம். ஹெச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்ட ஜோதி, கண்ணீருக்கெல்லாம் அப்பாற்பட்ட கம்பீர மனுஷி. ஹெச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு குறித்த விழிப்பு உணர்வுப் பிரசாரங்களில் தீவிரமாக இயங்கிக்கொண்டிருப்பவர். நாக்பூரில் வசிக்கிற ஜோதியிடம் தொலைபேசியிலோ, வாய்ஸ் மெசேஜிலோ பேச முடியாது. ஜோதி கேட்கும் திறனற்றவர். அவரை மின்னஞ்சல் மூலம் அணுகினேன்.

“ஜார்கண்ட்ல பிறந்தேன். திருமணமாகி வரிசையா மூன்று கர்ப்பங்கள். எங்க ரெண்டு பேருக்கும் இடையில் தாம்பத்யம் இருந்ததில்லை, மேரிட்டல் ரேப்தான் நடந்தது. கருத்தடை மாத்திரைகளை என் உடம்பு ஏத்துக்கலை. செக்ஸ் இன்பத்துக்குத் தடையா இருக்கும்னு, என் முன்னாள் கணவர் காண்டம் பயன்படுத்த மறுத்துடுவார்.  அவரது வற்புறுத்தல் காரணமா மூணு அபார்ஷன் பண்ணினேன். அபார்ஷன் பண்றப்ப நடந்த மருத்துவ அலட்சியத்துனால,  எனக்கு ஹெச்.ஐ.வி பாசிட்டிவ்னு ரிசல்ட் வந்தது.” - உணர்வுகளைச் சுமந்த ஜோதியின் எழுத்துகள், நம்மை உலுக்குகின்றன. “அந்தத் தருணத்துல என்கூட இருக்கவேண்டிய கணவர், கொஞ்சமும் குற்றவுணர்ச்சி இல்லாம என்னை வற்புறுத்திக் கையெழுத்து வாங்கிட்டுப் பிரிஞ்சு போயிட்டார்’’ என்று சொல்லும் ஜோதி அதற்குப்பிறகுதான் வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்கும் முழுமனுஷியாக மாறியிருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick