“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்!” | Vaiko talks about Seeman and politics - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/04/2018)

“புலிகளின் துரோகிகள் சீமானின் பாதுகாவலர்கள்!”

எம்.கணேஷ், படங்கள்: வீ.சக்தி அருணகிரி

``நல்லா இருக்கீங்களா  தாத்தா?’’ என்று கேட்டதும் சிரித்துக்கொண்டே அந்தச் சிறுமியைத் தூக்கிக்கொண்டார் வைகோ. அவள் கையில் வைத்திருந்த தண்ணீர்ச் செம்பை வாங்கிக் குடித்துவிட்டு, ‘`நல்லா இருக்கேன். நல்லா படிக்கணும்… சரியா?’’ என்று சொல்லிவிட்டுக் கீழிறக்கி விடுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களைக் கடந்து நியூட்ரினோ எதிர்ப்பு நடைப்பயணம் மேற்கொண்டிருந்த ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோவுடன் ஒரு நாள் நடந்துகொண்டே  பேச ஆரம்பித்தேன்.

``இந்த நடைப்பயணம் உங்களின் பத்தாவது நடைப்பயணம். தேனி மாவட்ட மக்கள் உங்களை எப்படிப் பார்க்கிறார்கள்?’’

“போராட்டக்குணம் கொண்ட இந்த மக்களுக்கு நான் பழக்கப்பட்டவன்தானே. ஒவ்வொரு வீட்டின் வெளியேயும் குடும்பத்தோடு நின்று என்னை வரவேற்று வாழ்த்துகிறார்கள். போராட்டம் வெற்றி பெறும் என்று நம்பிக்கையோடு பேசுகிறார்கள். நியூட்ரினோவை எதிர்த்து நான்காவது முறை இந்த மக்களைச் சந்திக்கிறேன். இரண்டு முறை வாகனப் பிரசாரம், ஒரு முறை மேதா பட்கருடன் இணைந்து போராட்டம். இப்போது நடைப்பயணம்.”