சர்வைவா - 8 | Surviva - Techno Series - Ananda Vikatan | ஆனந்த விகடன்

சர்வைவா - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
அதிஷா, ஓவியம்: கோ.ராமமூர்த்தி

‘2001: எ ஸ்பேஸ் ஒடிசி’ திரைப்படத்தில்தான், தன் மனித எஜமானரின் கட்டளையை எந்திரக் கதாபாத்திரம் மறுத்துப் பேசிய முதல் காட்சி இடம்பெற்றது. உருவமற்ற சிவப்புக்கண் HALதான் உலகின் முதல் எந்திர வில்லன்.

1968-ல் திரைப்படம் வெளியாகி சென்றவாரத்தோடு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆர்தர்.சி.கிளார்க்கின் ‘The sentinel’ என்ற சிறுகதையை எடுத்துக்கொண்டு, எழுத்தாளரோடு அமர்ந்து மெருகேற்றி இரண்டு ஆண்டுகள் உழைத்து ‘2001 : A Space odysey’ படத்துக்கான கதையை உருவாக்கினார் இயக்குநர் ஸ்டான்லி குப்ரிக்.
 
ஸ்பீல்பெர்க் தொடங்கி ரிட்லி ஸ்காட், ஜார்ஜ் லூகஸ், ஜேம்ஸ் கேமரூன் என ஹாலிவுட் ஜாம்பவான்களை  AI திரைப்படங்களை நோக்கி அழைத்து வந்தது குப்ரிக்கின் படம்தான். தொடர்ச்சியாக வெளியான இத்தகைய திரைப்படங்களில் பல்வேறுவிதமான ரோபோக்கள் சித்திரிக்கப்பட்டன. ஆனால், நடிக்கிற எந்திரங்களை, கதை எழுதுகிற, இசையமைக்கிற எந்திரங்களை, இயக்குநர் எந்திரங்களை அவர்கள் சினிமாவில் சித்திரித்தது இல்லை. ஆனால், விஞ்ஞானிகள் இதுகுறித்து சிந்திக்கத் தொடங்கிவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick