வின்னிங் இன்னிங்ஸ் - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பரிசல் கிருஷ்ணா

புதுவழி காண்!

தில் ஷெட்டியின் பூர்வீகம் மங்களூர் என்றாலும், பிறந்தது, படித்தது எல்லாமே சென்னையில்தான். படித்து முடித்து, ஒரு நல்ல நிறுவனத்தில் வேலை, கை நிறைய சம்பளம், வீக் எண்ட் பொழுதுபோக்குகள், கல்யாணம், குழந்தை... இப்படித்தான் இருந்தது அவரது பள்ளிக்காலக் கனவு.  பத்து வருடங்களுக்கு முன் அவர் நண்பர்களுடன் ஆரம்பித்த `பேங்க் பஜார்’ வளர்ந்து, அவரது கனவின் எல்லையை வானையும் தாண்டி  விரித்திருக்கிறது.
   
கிண்டி இன்ஜினீயரிங் கல்லூரியில் படிப்பு முடித்து நியூயார்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பும் முடித்தவருக்கு, அமெரிக்காவிலேயே வேலையும் கிடைத்தது. தான் பிறந்து வளர்ந்த சென்னையில் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று சின்னதாக ஒரு பொறி மனதில் உருவானது,   அந்தச் சமயத்தில்தான். ஆனால், என்ன  தொழில், எப்படி ஆரம்பிப்பது போன்ற எந்தத் திட்டமிடலும் அப்போது அவரிடம் இல்லை.

2007-ம் ஆண்டில் அமெரிக்காவில் அமேசான் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டிருந்த இவரின் கல்லூரி நண்பர் அர்ஜுன் ஷெட்டி இந்தியா வந்து, வீட்டுக்கடனுக்காக அலைந்திருக்கிறார். ஒரு வங்கிக்கடனுக்காக, வங்கிகள் கேட்ட பத்திரங்கள் அவரை மலைக்க வைத்திருக்கின்றன. ரேஷன் கார்டில் தொடங்கி எத்தனை பேப்பர்கள்... அந்தக் கடன் அப்ரூவ் ஆகும் தினம் வரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான பத்திரங்களை வங்கி கேட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்