பணம் பழகலாம்! - 8 | Financial Awareness - Ananda V ikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/04/2018)

பணம் பழகலாம்! - 8

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

சொக்கலிங்கம் பழனியப்பன்

நிதித் திட்டமிடல் என்றால் என்ன... அது அவசியமா?

இன்றைய இளைஞர்களிடம் இல்லாத பழக்கம் `நிதித் திட்டமிடல்.’ செலவழி, சம்பாதி என்பது ஒருகட்டத்துக்குமேல் உதவாது.   35 வயதைத் தாண்டி விட்டால், `நிதித் திட்டமிடல் எவ்வளவு முக்கியம், நாம் முன்னரே கொஞ்சம் திட்டமிட்டுப் பணம் சேர்த்திருக்கலாமே!’ என வருத்தப்படவைக்கும் அளவுக்கு  மன  அழுத்தம் கூடும் என்பதே உண்மை.

நிதித் திட்டமிடல் என்பது, மிகவும் எளிதானது. உங்களுக்கு நிதி சார்ந்த புரிதல் இருக்கையில், மிகவும் எளிதாக நீங்களே திட்டமிட்டுக்கொள்ளலாம். இல்லையேல், ஒரு நிதி ஆலோசகரின் உதவியுடன் அதைச் செய்து கொள்ளலாம். இந்த நிதித் திட்டமிடலில், முதற்கட்டமாக உங்களுக்குப் போதுமான அளவில் ஹெல்த் மற்றும் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் உள்ளதா என ஆராய வேண்டும். போதுமான அளவில் இல்லாதபோது முதலில் அவற்றைப் பூர்த்திசெய்துகொள்ள வேண்டும். உங்கள் வருமானத்துக்கு ஏற்றாற்போல் டேர்ம் லைஃப் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் ஆண்டு வருமானத்தைப்போல் 10, 20 மடங்கு உங்களுக்கு டேர்ம் இன்ஷூரன்ஸ் அவசியம்.

குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் குறைந்தபட்சமாக ஐந்து லட்சம் ரூபாய்க்காவது மருத்துவக் காப்பீடு இருக்க வேண்டும். அதிக மருத்துவச் செலவு ஏற்படலாம் என எதிர்பார்ப்பவர்களுக்கு, டாப்-அப் ஹெல்த் இன்ஷூரன்ஸும் உள்ளது. பெரிய நகரங்களில் வாழ்பவர்கள், சற்று அதிகமான ஹெல்த் இன்ஷூரன்ஸ் கவரேஜ் வைத்துக்கொள்வது அவசியம்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க