கூடுகள் நிரம்பிய வாழ்க்கை!

கார்த்தி

ரக்கிளையிலிருந்து விழும் கூடொன்றை எடுத்து மரத்தில் வைத்தபடி தன் பயணத்தை ஆரம்பிக்கிறான் சிறுவயது ஜோஷ்வா. முறிந்த கிளையிலிருந்து விழும்  ஒவ்வொரு கூட்டுக்கும் ஓர் உதவிக்கரம் தேவைப்படுகிறது. அஞ்சலி மேனன் இயக்கியிருக்கும் ‘கூடே’ திரைப்படம், முறிந்த கிளைகளின் கூடுகளாலும், உதவிக்கரம் நீட்டும் மனிதர்களாலும் நிரம்பியிருக்கிறது.

பிருத்விராஜின் தங்கையாக, மரபுவழி நோயினால் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில்,  நான்காண்டுகளுக்குப் பின்னர் நஸ்ரியா நடித்திருக்கிறார். தன் கவிதைக்குக் கிடைக்கும் சிறு அங்கீகாரத்துக்குக் குதூகலமாகும் காட்சி ஆகட்டும், தன் காதலனை மீண்டும் சந்திக்கும்போது நேசத்துடன் அருகில் சென்று அமர்வதாகட்டும், ஒவ்வொருமுறையும் ‘பசிக்குது’ எனச் சொல்லிவிட்டு அவர் செய்யும் லூட்டி ஆகட்டும்... எல்லாமே அதகளம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick