“நோபல் பரிசு வாங்கின மாதிரி சந்தோஷம்!”

வீயெஸ்வி - படங்கள்: கே.ராஜசேகரன்

‘இவராமே... அவராமே...’ என்று மே மாதத்திலிருந்தே பெயர்கள் கசிய ஆரம்பித்து விட்டன!

மியூசிக் அகாடமியின் `சங்கீத கலாநிதி’ விருதுக்கு, தவில் அரித்வாரமங்கலம் பழனிவேல், பாடகர்கள் ஓ.எஸ்.தியாக ராஜன், நெய்வேலி சந்தானகோபாலன், அருணா சாய்ராம் ஆகிய பெயர்கள் இசை வட்டத்தில் சுழன்றுகொண்டிருந்தன. அதிலும்
ஓ.எஸ்.தியாகராஜனின் பெயர் பல வருடங்களாகவே அடிபட்டு அடிபட்டு அவருக்கே அலுத்துவிட்டிருக்கும்.

இறுதியில், இந்த வருட `சங்கீத கலாநிதி’ விருதுக்கு அருணா சாய்ராம் ஒருமனதாகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார். எப்பவுமே அகாடமியில் தேர்வு ஒரு மனதாகத்தான். முக்கால் மனது, அரை மனது, கால் மனது என்ற வியாபாரமே அங்கு கிடையாது!

விருது அறிவிக்கப்பட்ட இரண்டாவது நாள் காலை உச்சி வெயிலுக்கு முன்பாக அருணா சாய்ராமைச் சந்திக்கச் சென்றிருந்தேன். ``நமஸ்காரம்... வாங்கோ...’’ என்றவருக்கு, லேசாகத் தொண்டை கட்டியிருப்பதுபோல் தோன்றியது. இரண்டு நாள்களாகத் தொலைபேசி வழியே `கங்கிராட்ஸ்’ சொன்னவர்களுடனும், நேரில் வந்து வாழ்த்தியவர்களுடனும் பேசிப்பேசியே தொண்டை பாதிக்கப் பட்டிருக்கும்!

தினமும் காலையில் குளித்து முடித்தவுடன் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இருக்கும் ராகவேந்திரர் மடத்துக்கும், அதற்கு எதிரே இருக்கும் நரசிம்மசுவாமி கோயிலுக்கும் சென்று வருவதும் அருணா சாய்ராமின் வழக்கம். மந்த்ராலய மகானின் பக்தை இவர். வீட்டுக்குக்கூட `மந்த்ராலயம்’ என்றுதான் பெயர் சூட்டியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick