“பாராட்டுக்கள்தான் எங்களுக்குப் பரிசு!”

வே.கிருஷ்ணவேணி - படங்கள்: க.பாலாஜி

ண்பதுகளின் மத்தியில்  கனவுக்கண்ணி. ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லை. உண்மை யிலேயே பானுப்ரியா வின் அழகான கண்களுக்குள் விழுந்த ரசிகர்கள் ஏராளம். நீண்ட இடைவெளிக்குப் பின் இரண்டாம் இன்னிங்ஸில் இருப்பவரைச் சந்தித்தேன்.

“ஒரு நடிகையாக உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் கடந்து வந்தவை?”

“பத்தாவது படிச்சு முடிச்ச உடனே எனக்கு நடிக்க வாய்ப்பு கிடைச்சிடுச்சு. அப்பா சினிமா விநியோகஸ்தராக இருந்தார். அப்பெல்லாம் லிபர்டி தியேட்டர்லதான் நிறைய படங்கள் ரிலீஸ் ஆகும். ஸ்கூல் போற நேரம் தவிர மற்ற நேரங்களில் நானும், என் தங்கச்சியும் பெரும்பாலும் அப்பாவுடன் அங்கேதான் இருப்போம். அதனால, நடிப்பு எனக்குள்ள ஊறியிருந்தது. நானும், என் தங்கச்சியும் அப்பப்போ வீட்டுல அபிநயம் பண்றதும் உண்டு. நிறைய அனுபவம் உண்டு. எல்லாமே எனக்குப் பக்குவத்தையும் நிதானத்தையும் பொறுமையையும் கற்றுத் தந்தன. சின்ன வயசுல அவ்வளவு துறுதுறுனு இருப்பேன். ஒரு இடத்துல உட்காரமாட்டேன். ஓடிட்டே இருப்பேன்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick