“எனக்குப் பிடித்த ஒரே அட்வைஸ்...”

சக்தி தமிழ்செல்வன் - படம்: பா.காளிமுத்து

“சினிமா மக்களின் ஊடகம்; நேரடியா மக்களுக்கு அவங்க பிரச்னையை எடுத்துட்டுப்போற மீடியம். 10 மேடைகள்ல பேசுறதை 10 நிமிஷக் காட்சியில நாம சொல்லிட முடியும். சில படங்கள், மக்களின் அப்போதைய உணர்வுகளைத் தூண்டிவிட்டுக் கைத்தட்டல் வாங்குறதுக்காக எடுக்கப்படுது. அதனால கைத்தட்டல் வாங்கலாம், காசு சம்பாதிக்கலாம்... வேற எந்த நல்ல விஷயமும் நடக்காது. அந்த மாதிரி உணர்வுகளைத் தூண்டிவிடாம, நேர்மையான படைப்புகளைக் கொடுக்கணும்” - அழுத்தமாய்த் தன் கருத்துகளை முன்வைத்து, விகடன் மாணவர் பயிற்சித் திட்ட முகாமில் - `தமிழகம் இனி...’ என்ற தலைப்பின் கீழ் மாணவப் பத்திரிகை யாளர்களிடையே உரையாற்றத் தொடங்கினார் இயக்குநர் வெற்றி மாறன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick