“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இன்னொரு ஜாலியன் வாலாபாக்!”

ஐஸ்வர்யா - படம்: க.பாலாஜி - ஓவியம்: பாரதிராஜா

தீஸ்தா செடல்வாட் - இந்தியாவில் இயங்கும் மனித உரிமைச் செயற் பாட்டாளர்களில் முக்கியமானவர். 2002 குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டரீதியாக உறுதியாகப் போராடியவர். இந்தியாவின் முதல் அட்டர்னி ஜெனரல் எம்.சி.செடல்வாடின் பேத்தியும்கூட. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் தொடர்பாக மனித உரிமைப் பாதுகாப்புக் குழுவின் ‘உண்மை கண்டறியும் அறிக்கை’ புத்தக வெளியீட்டுக்காகத் தமிழகம் வந்தவரிடம் பேசினேன்...

“தமிழகத்தில் நிகழும் பொது நிகழ்ச்சிகளில் நீங்கள் அவ்வளவாகப் பங்கெடுக்காதவர். ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பான நிகழ்வில் மட்டும் குறிப்பாகப் பங்கெடுக்கக் காரணம் என்ன?”

“ஜாலியன் வாலாபாக் படுகொலைச் சம்பவத்தின் நூற்றாண்டு நினைவுதினம்,  வரும் ஆண்டில் அனுசரிக்கப்படவிருக்கிறது. அந்தப் படுகொலையை விசாரித்த ஹன்டர் கமிஷனில் இருந்தவர்களில் என் கொள்ளுத்தாத்தா சிமன்லால் செடல்வாடும் ஒருவர். ஜெனரல் டயரை விசாரித்தபோது, `நான் ஜாலியன் வாலாபாக்கில் சுட்டது அங்கே இருக்கும் மக்களை விரட்டுவதற்காக மட்டுமில்லை. இனிமேல் இந்தியர்கள் எவருமே எங்களை எதிர்த்துப் போராடக் கூடாது என்பதற்காகத்தான்’ என்றார். தூத்துக்குடித் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமும் எனக்கு ஜாலியன் வாலாபாக் படுகொலைகளைத்தான் நினைவுபடுத்தியது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick