சோறு முக்கியம் பாஸ் - 23 | Food: Kanadukathan - Sri Narayana Coffee House - Ananda Vikatan | ஆனந்த விகடன்

சோறு முக்கியம் பாஸ் - 23

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
வெ.நீலகண்டன் - படம்: சாய் தர்மராஜ்

ணவாக இருக்கட்டும், வீடாக இருக்கட்டும்... செட்டிநாட்டு மக்கள் ரசனையானவர்கள். பர்மா தேக்கு, இத்தாலி டைல்ஸ், ஜெர்மனி மார்பிள்ஸ்... எனத் தனித்துவமான பொருள்களால் வார்க்கப்பட்ட,  ஒரு தெருவில் தொடங்கி இன்னொரு தெருவில் முடிகிற மாளிகைகளை செட்டிநாட்டில் மட்டும்தான் பார்க்க முடியும். உணவும் அப்படித்தான். வாசனையும் ருசியும் சரிவிகிதத்தில் கலந்த வளமான செட்டிநாட்டு உணவுகளுக்கு உலகெங்கும் ஏராளமான ரசிகர்கள். 70-க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய பகுதிதான் செட்டிநாடு. இன்று, அந்தப் பகுதிகளில் அசலான செட்டிநாட்டு உணவுகளைத் தேடிக் கண்டடைவது சவாலாக இருக்கிறது. உணவகத்தின் போர்டுகளில் மட்டும்தான் ‘செட்டிநாடு’. உள்ளே நுழைந்தால், ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், பிரியாணி வகையறாக்கள்தான் நிறைந்திருக்கின்றன.

கோழித் தெரக்கல், உப்புக்கறி, வாழைப்பூ கோலா, கருணைக்கிழங்கு மசியல், மாங்காய், வெண்டைக்காய் மண்டி, நண்டு குருமா,   பூண்டு-வெங்காயக் குழம்பு, கோலா உருண்டைக் குழம்பு எனச் செட்டிநாட்டுக்கேயுரிய அசல் உணவுகளைச் சாப்பிட ஆசைப்படுபவர்கள்,  கானாடுகாத்தான் ராஜா சர் தெருவிலிருக்கும் ‘ஸ்ரீ நாராயணா காபி ஹவுஸு’க்குப் போகலாம். 

பிரமாண்டமான வீடு மாதிரி இருக்கிறது உணவகம். தர்பார் ஹால் மாதிரி டைனிங். போதிய இடைவெளியுடன் இருக்கைகள். 50 பேர்  அமர்ந்து சாப்பிடலாம். செட்டிநாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளும், உள்ளூர்க்காரர்களும் நிறைந்திருக்கிறார்கள். சமையல், பரிமாறுதல் எல்லாமே உள்ளூர்ப் பெண்கள்தாம். சூழலே வித்தியாசமாக இருக்கிறது.

வெள்ளைப் பணியாரம், கந்தரப்பம், பூரணக் கொழுக்கட்டை எனச் செட்டிநாட்டுப் பலகாரங்கள் எல்லாம் கிடைக்கின்றன. மதியம் ‘செட்டிநாடு ஸ்பெஷல் லஞ்ச்’ சாப்பிடலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick