கலக்கப் போவது நாங்க!

அலிடா - Alita

“நா
ன் ஒரு கதை சொல்லி. என் தேடுதலுக்கான பயணம் அவ்வாறு தான் தொடங்குகிறது. நீங்கள் யாரும் செல்லாத இடங்களுக்குச் சென்று, யாரும் கேட்டிராத ஒரு கதையை சொல்வதில் தான் எல்லாம் இருக்கிறது” இதுதான் ஜேம்ஸ் கேமருன். ஃபார்முலா. தன் முதல் குறும்படமான Xenogenesis தொட்டு, ஏலியன்ஸ், டெர்மினேட்டர், டைட்டானிக், அவதார் என மனிதர் தொட்டதெல்லாம் ஹிட் அடிக்க இது தான் காரணம். உலகையே ஆச்சர்யத்துக்குள் ஆழ்த்திய அவதார் படத்தின் அடுத்த பாகம் 2020ல் வெளிவர உள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதியில் கேமரூன் திரைக்கதை எழுதிய ``அலிட்டா : தி பேட்டில் ஏஞ்சல்” படம் வெளியாக இருக்கிறது. CYBORGகளும் மனிதர்களும் ஒன்றாக இயங்கும் சூழலில் பழைமையான சைபோர்க் ஒன்றை மனிதர்கள் கண்டெடுக்கிறார்கள். அதறகும் பிற சைபோர்களுக்கும் நடக்கும் போரும் அன்பும்தான் தான் கதை. ஜப்பானிய இதழ் ஒன்றில் தொடர்கதையாக வந்த அலிட்டாவை, தன் திரைக்கதை மூலம், ஹாலிவுட்டில் அறிமுகம் செய்ய இருக்கிறார் ஜேம்ஸ் கேமரூன். ஸ்பை கிட்ஸ், சின் சிட்டி படங்களை இயக்கிய ராபர்ட் ரோட்ரிகெஸ் இப்படத்தை இயக்குகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்