MISSION IMPOSSIBLE - ராகுல் தயாரா? | Rahul Gandhi - Ananda Vikatan | ஆனந்த விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (16/08/2018)

MISSION IMPOSSIBLE - ராகுல் தயாரா?

1982 மார்ச் 29-ம் தேதி.

பிரதமர் இந்திரா காந்தியின் இல்லத்தில் பிரளயம். மாமியார் இந்திரா காந்திக்கும் மருமகள் மேனகா காந்திக்கும் இடையே காரசார சண்டை. இரண்டு வயதான மகன் வருண் காந்தியைத் தூக்கிக்கொண்டு, இந்திராவின் வீட்டை விட்டு வெளியேறுகிறார் மேனகா. அதற்குச் சில நாள்களுக்கு முன்புதான் வருண் காந்தியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் அரங்கேறியிருந்தன. வருண்மீது எல்லையில்லாப் பாசத்தை வைத்திருந்தார் இந்திரா. ‘‘வருணை நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்ற இந்திராவின் கெஞ்சல்கள் காற்றில் கரைய... மேனகா விருட்டெனப் புறப்பட்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க